நாய்கள், பூனைகள் மட்டுமல்ல நாம் வீட்டில் வளர்க்க கூடிய பல வளர்ப்பு பிராணிகளும் மனிதர்களோடு ஒன்றிணைந்து விடுகிறது. அவை நம்மிடம் அதிகம் உரிமை எடுத்துக்கொண்டு நமது நண்பர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்கள் போல மாறிவிடுகிறது. பலரது மன அழுத்தத்தையும் போக்கும் மாமருந்தாக நாம் வீட்டில் வளர்க்கும் வளர்ப்பு பிராணிகள் செயல்படுகின்றன. விலங்கு பிரியர்கள் அனைவரும் அவர்கள் வளர்க்கும் பிராணிகள் அன்றாடம் வீட்டில் அல்லது பொது வெளியில் செய்யும் சில நகைச்சுவையான அல்லது ரசிக்கும்படியான சில செயல்களை படம்பிடித்து அவர்கள் பார்த்து மகிழ்வது மட்டுமல்லாமல், மற்றவர்களையும் மகிழ்விக்க இணையத்தில் பதிவேற்றி வருகின்றனர்.
மேலும் படிக்க | உணவளிக்க வந்த நபரை தாக்கிய முதலை: திகிலூட்டும் வைரல் வீடியோ
அப்படி ஒரு அற்புதமான வளர்ப்பு பிராணியின் வீடியோ தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி உள்ளது. ட்விட்டரில் நேச்சர் கம்பேனியின் என்கிற கணக்கு பக்கத்தில் இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது. அந்த வைரல் வீடியோவில், ஒருவர் படுத்திருப்பது போலவும், அவர் தலையை பிடித்தபடி பூனை ஒன்று நிற்பது போலவும் தென்படுகிறது. பின்னர் அந்த நபர் புஷ் அப் செய்து கொண்டு இருக்கிறார், உடற்பயிற்சி கூடங்களில் பயிற்சியாளர்கள் எப்படி ஒருவருக்கு பயிற்சி அளிப்பார்களோ அதே போல அந்த பூனை புஷ் அப் செய்து கொண்டு இருப்பவரின் தலையை பிடித்து கொண்டு இருக்கிறது.
Personal trainer pic.twitter.com/DB2DRkgJGF
— Nature Campanion (@naturecampanion) June 9, 2022
இது பார்ப்பதற்கு அந்நபருக்கு, பூனை பயிற்சி அழிப்பது போல இருக்கிறது. இணையத்தில் பதிவேற்றப்பட்ட இந்த வீடியோவை இணையவிசைகள் பலரும் பார்த்து ரசித்துள்ளனர். மேலும் இந்த க்யூட்டான வீடியோவிற்கு ஆயிரக்கணக்கான லைக்குகளும், பல கமெண்டுகளும் குவிந்து வருகின்றன.
மேலும் படிக்க | நாய்க்கு மசாஜ் செய்யும் மியாவ்..மனதை மயக்கும் வீடியோ!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR