ஹலோ கொஞ்சம் தள்ளுங்க, நான் சாப்பிடணும்: பூனைகளிடம் மாஸ் காட்டிய எலி, வைரல் வீடியோ

Funny Animal Video: பொதுவாக பூனைகளை கண்டு எலி அஞ்சி ஓடும் என நாம் நினைப்பதுண்டு. ஆனால், அப்படி அல்ல என நிரூபிக்கும் வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.   

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 30, 2022, 05:05 PM IST
  • சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன.
  • சமீப காலங்களில் விலங்குகளின் வீடியோக்கள் பட்டையை கிளப்பி வருகின்றன.
  • தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
ஹலோ கொஞ்சம் தள்ளுங்க, நான் சாப்பிடணும்: பூனைகளிடம் மாஸ் காட்டிய எலி, வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 

சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் விலங்குகளின் வீடியோக்கள் பட்டையை கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

தற்போது வெளியாகியுள்ள ஒரு வீடியோ அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வீடியோ எலிகள் மற்றும் பூனைகள் பற்றியது. பொதுவாக பூனைகளை கண்டு எலி அஞ்சி ஓடும் என நாம் நினைப்பதுண்டு. ஆனால், அப்படி அல்ல என நிரூபிக்கும் வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. 

மேலும் படிக்க | தாக்க வந்த புறாவுக்கு கிஸ் கொடுத்த பூனை: இணையவாசிகளை அழ வைத்த வைரல் வீடியோ 

வீடியோவில் ஒரு தட்டில் உணவு இருப்பதை காண முடிகின்றது. அந்த உணவை இரு பூனைகள் சாப்பிடுவதைக் காண முடிகின்றது. அப்போது அங்கு ஒரு எலி வருகிறது. அதற்கு பின் வீடியோவில் நடக்கும் விஷயம் நம்மை ஆச்சரியப்படுத்துகின்றது. 

பூனைகளை கண்டுகொள்ளாமல் மாஸ் காட்டிய எலி 

பூனைகள் முன்னால் வந்த பிறகு எலி பூனைகளை கண்டு சிறிதும் அஞ்சவில்லை. மாறாக, இரண்டு பூனைகளுக்கும் தான் தான் தலைவன் என்பதுபோல் தலை நிமிர்ந்து நிற்கிறது. பூனைக்கு நடுவில் புகுந்து தட்டில் உள்ள உணவை உண்ணத் தொடங்குகிறார். 

இதைப் பார்தத பூனைகள் அதிர்ச்சி அடைந்தன. பூனைகள் எலியை பாடாய் படுத்தவுள்ளன என நினைத்திருக்கும் இணயவாசிகளுக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. எலியை கண்டுகொள்ளாத பூனைகள் உணவை சாப்பிடுவதை தொடர்கின்றன. இந்த வீடியோவை பார்க்கும் அனைவருக்கும் அதிர்ச்சியும் ஆச்சரியமும் ஏற்படுகின்றது. 

பூனைகளுக்கு முன் மாஸ் காட்டும் எலியின் வீடியோவை இங்கே காணலாம்:

 

கமெண்டுகளை அள்ளி வீசும் இணயதளவாசிகள்

இந்த வேடிக்கையான வீடியோ இன்ஸ்டாகிராமிலும் 18plusguyy என்ற பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த வீடியோவுக்கு நெட்டிசன்கள் பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள். இந்த வீடியோவுக்கு பல வித வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்து வருகின்றன. 

பரம எதிரியாக இருந்தாலும், பயப்படத் தேவையில்லை. நம்மை விட பலசாலியாக இருந்தாலும், நாம் அச்சம் இல்லாமல் தைரியமாக இருந்தால், முன்னால் இருப்பவர் நம்மை சீண்டத் தயங்குவார் என்பதை இந்த எலி நமக்கு புரிய வைத்துள்ளது.

மேலும் படிக்க | கொஞ்சிக் கொஞ்சி பேசி மதிமயக்கும் கிளி; வியப்பில் ஆழ்ந்த நெட்டிசன்கள் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News