இவருதாங்க உண்மையான ஸ்னேக் பாபு: பாம்பெல்லாம் இவருக்கு பஞ்சுமிட்டாய் மாதிரி, திகில் வைரல் வீடியோ

Scary Snake Video: டஜன் கணக்கான விஷப் பாம்புகளுக்கு மத்தியில் தூங்கும் நபரை நீங்கள் பார்த்ததுண்டா? விஷப்பாம்பு கடித்தால் என்ன ஆவது என்ற கவலை இவருக்கு இல்லை. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 29, 2022, 03:07 PM IST
  • பாம்புகளுக்கு மத்தியில் படுத்திருக்கும் நபர்.
  • பாம்பு அவரை கடித்ததா கடிகவில்லையா?
  • இணையத்தில் வைரலாகும் திகில் வீடியோ.
இவருதாங்க உண்மையான ஸ்னேக் பாபு: பாம்பெல்லாம் இவருக்கு பஞ்சுமிட்டாய் மாதிரி, திகில் வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 

சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் பாம்புகளின் வீடியோக்கள் பட்டையை கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

பாம்பை பார்த்தால் பலசாலிகளும் நடுங்குவார்கள். பாம்பிடமிருந்து விலகி இருக்கவே அனைவரும் ஆசைப்படுவதுண்டு. ஏனென்றால், பாம்பு எப்போது எப்படி நடந்துகொள்ளும் என்பதை யாராலும் கணிக்க முடியாது. ஆகையால் பாம்புகளிடம் இருந்து விலகி இருப்பது நல்லது என்றே பலரும் நினைப்பதுண்டு. இருப்பினும், ஆபத்தான மற்றும் விஷ விலங்குகளுக்கு மத்தியில் வாழவும், அவற்றுக்கு நெருக்கமாக இருக்கவும் சிலர் விரும்புகிறார்கள். சிலர் விஷப்பாம்புகளுக்கும் அஞ்சுவதில்லை. 

மேலும் படிக்க | என்னய்யா நடக்குதிங்க: மாலைக்கு பதில் பாம்பை மாற்றிக்கொண்ட மணமக்கள், வைரல் வீடியோ 

விஷப் பாம்புகளுக்கு மத்தியில் உறங்கும் மனிதன் 

டஜன் கணக்கான விஷப் பாம்புகளுக்கு மத்தியில் தூங்கும் நபரை நீங்கள் பார்த்ததுண்டா? விஷப்பாம்பு கடித்தால் என்ன ஆவது என்ற கவலை இவருக்கு இல்லை. 

சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், ஒருவர் டஜன் கணக்கான கருப்பு நாகப்பாம்புகளுக்கு மத்தியில் படுத்திருப்பதை காண முடிகின்றது. மிக ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், அந்த நபரை பாம்பு கடிக்கவும் செய்கிறது. எனினும், அப்படியும் அவருக்கு எந்த வலியும் ஏற்பட்டதாக தெரியவில்லை. இணையவாசிகள் வீடியோவைப் பார்த்து அதிசயிக்கின்றனர், ஆச்சரியத்தில் உள்ளனர். 

டஜன் கணக்கான விஷ நாகப்பாம்புகள் ஒரு இடத்தில் இருப்பதை வீடியோவில் காண முடிகிறது. அப்போது ஒரு நபர் அங்கு வந்து படுத்துக் கொள்கிறார். இந்த ஆபத்தான பாம்புகளுக்கு மத்தியில் ஒருவர் தூங்க முயற்சிப்பதை வீடியோவில் காண முடிகின்றது. ​​அனைத்து கருப்பு நாகப்பாம்புகளும் அவரைப் பார்க்கின்றன. இதுமட்டுமின்றி, இதில் பல பாம்புகள் தொடர்ந்து நபரை கடிக்கவும் செய்கின்றன. ஆனால், அந்த நபர் இவற்றால் அசரவில்லை. 

பாம்புகளிடம் பந்தா காட்டும் நபரின் வீடியோவை இங்கே காணலாம்: 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by WEIRD Vidz (@weirdvidz)

இன்ஸ்டாகிராமில் வீடியோ பகிரப்பட்டுள்ளது

இந்த வீடியோ weirdvidz என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. வீடியோ பார்ப்பதற்கு திகிலூட்டும் வகையில் உள்ளது. இந்த வீடியோ பகிரப்பட்ட உடனேயே இணையத்தில் வைரல் ஆனது. இதைப் பார்த்து, ஒருவரால் எப்படி இப்படிச் செய்ய முடிகிறது என்று மக்கள் ஆச்சரியப்படுகிறார்கள். பாம்புகள் கடித்த பிறகும், அந்த நபர் அவற்றைப் புறக்கணித்து மீண்டும் தூங்க முயற்சிப்பதை வீடியோவில் காண முடிகின்றது. அந்த நபரின் கழுத்தில் பாம்புகள் ஒட்டிக்கொண்டிருப்பதையும் வீடியொவில் காண்கிறோம். 

மேலும் படிக்க | ரொனால்டோவிற்கே டாப் கொடுக்கும் சேவல்! வைரலாகும் வீடியோ! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News