பூமி மேலே தன்னந்தனி உயிர்கள் எங்கும் இல்லை... பள்ளத்தில் சிக்கிய கன்றுக்குட்டியை மீட்கும் வைரல் வீடியோ

பள்ளத்தில் சிக்கிய கன்றுக்குட்டியை இருவர் மீட்கும் வீடியோ வைரலாகியுள்ளது.

Written by - க. விக்ரம் | Last Updated : May 29, 2022, 07:33 PM IST
  • கன்றுக்குட்டியை காப்பாற்றிய இருவர்
  • கன்றுக்குட்டியை காப்பாற்றும் வீடியோ வைரலாகியுள்ளது
 பூமி மேலே தன்னந்தனி உயிர்கள் எங்கும் இல்லை... பள்ளத்தில் சிக்கிய கன்றுக்குட்டியை மீட்கும் வைரல் வீடியோ title=

அவசரமான இந்த உலகத்தில் சக மனிதரை நின்று பார்க்க நேரமின்றியும், மனமின்றியும் பலர் ஓடிக்கொண்டிருக்கின்றனர். மனிதம் என்ற ஒன்று அழிந்துவிட்டதோ என்ற சந்தேகம் எழும் அளவுக்கு ஏராளமான விஷயங்கள் உலகெங்கும் நடந்துவருகின்றன.

அதேசமயம் அனைத்து உயிர்களையும் சமமாக மதித்து எந்த உயிர் ஆபத்தில் சிக்கினாலும் உடனடியாக ஓடோடி சென்று உதவும் மனம் படைத்தவர்களும் உலகத்தில் இருக்கவே செய்கிறார்கள். அவர்களது செயல் மனிதம் மறந்து பறந்துகொண்டிருக்கும் பலருக்கு சவுக்கடி கொடுப்பது போலவே இருக்கும்.

மேலும் படிக்க | ‘அப்பாடா, யாரும் பாக்கல’: பல்பு வாங்கிய சிங்கத்தின் மைண்டு வாய்ஸ், வைரல் வீடியோ

அந்தவகையில் தற்போது பள்ளத்தில் சிக்கிய கன்றுக்குட்டியை இருவர் மீட்டிருக்கின்றனர். சாதாரணமாகவே எந்த உயிர் ஆபத்தில் சிக்கினாலும் நமக்கென்ன இருப்பவர்கள் மத்தியில் இவர்கள் செய்திருக்கும் செயல் பலரது பாராட்டை பெற்று அந்த வீடியோ வைரலாகியுள்ளது.

 

அந்த வீடியோவில் நிலத்துக்கு அடியில் இருக்கும் பள்ளம் ஒன்றில் கன்றுக்குட்டி சிக்கியிருக்கிறது. அதனைப் பார்த்த இருவரும் காப்பாற்ற முடிவு செய்தனர். அதன்படி ஒருவர் அந்த பள்ளத்துக்குள் நுழைய; நுழைபவரின் கால்களை மற்றொருவர் இறுக்கமாக பிடித்து ஒத்தாசை புரிகிறார்.

மேலும் படிக்க | பதுங்குக்குழியில் பதுங்கினாலும் பாய்ந்து வேட்டையாடும் சிறுத்தையின் பாதள வேட்டை

நீண்ட போராட்டத்துக்கு பிறகு அந்த கன்றுக்குட்டியை பள்ளத்திலிருந்து வெளியே வெற்றிகரமாக எடுத்துவிடுகின்றனர். தற்போது இந்த வீடியோவை நெட்டிசன்கள் பலரும் பகிர்ந்து கன்றுக்குட்டியை காப்பாற்றியவர்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்துவருகின்றனர்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News