வீடியோ: தவறாக நடந்து கொண்டவனின் கன்னத்தில் அறைந்த குஷ்பூ

பெங்களூருவில் தவறாக நடக்க முயன்ற இளைஞனை, காங்கிரஸ் செய்தி தொடர்பாளரான குஷ்பூ கன்னத்தில் அறைந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Last Updated : Apr 12, 2019, 08:51 AM IST
வீடியோ: தவறாக நடந்து கொண்டவனின் கன்னத்தில் அறைந்த குஷ்பூ title=

பெங்களூருவில் தவறாக நடக்க முயன்ற இளைஞனை, காங்கிரஸ் செய்தி தொடர்பாளரான குஷ்பூ கன்னத்தில் அறைந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மத்திய பெங்களூரு மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் ரிஸ்வான் அர்ஷத்தை ஆதரித்து நடிகை குஷ்பூ பிரச்சாரம் செய்தார். 

அப்போது அந்த கூட்டத்திற்கு மத்தியில் இளைஞன் ஒருவன் குஷ்பூவை தகாத முறையில் அணுகியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த குஷ்பூ, அந்த இளைஞனை கன்னத்தில் அறைந்தார். இதை அடுத்து அந்த இளைஞன் உள்ளூர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டான். தற்போது குஷ்பூ கன்னத்தில் அறைந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

 

Trending News