தமன்னா கூட இப்படி ஆடலம்மா! சூப்பர்! ரயில் பயணிகளின் ஜெயிலர் பட காவாலா டான்ஸ் வைரல்

Kaavaalaa Viral Video: சமூக ஊடகங்களில் வைரலாகும் காவாலா பாடலுக்கான டான்ஸின் மற்றொரு சூப்பர் மூவ்மெண்ட்ஸ்! இது ரயில் பயணத்தில் மொபைல் ஷீட் செய்யப்பட்ட சூப்பர் டான்ஸ்  

Written by - Malathi Tamilselvan | Last Updated : Aug 27, 2023, 11:49 AM IST
  • காவாலா ஜெயிலர் பட டான்ஸ்
  • ரயில் பயணத்தில் மொபைல் ஷீட்
  • அழகிய இளம்பெண்களின் டான்ஸ் வைரல் வீடியோ
தமன்னா கூட இப்படி ஆடலம்மா! சூப்பர்! ரயில் பயணிகளின் ஜெயிலர் பட காவாலா டான்ஸ் வைரல் title=

ஜெயிலர் வைரல் வீடியோ: ஜெயிலர் திரைப்படம் பல மகத்தான சாதனைகளை செய்து தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்தால், அதில் உள்ள காவாலா பாடலுக்கு தமன்னா போடும் ஆட்டத்தை அனைவரும் போட்டு, சமூக ஊடகங்களில் பதிவேற்றி வைரலாக்கி வருகின்றனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்ததில் இருந்தே சக்கைப்போடு போட்டு, வசூலிலும் அள்ளிக் குவித்து வரும் திரைப்படம் ஒன்னும் பத்து நாட்களில் OTTயில் வெளியாகும் என்ற அறிவிப்பே வைரலாகி வரும் நிலையில் இந்தப் பாடலுக்கான டான்ஸ் வீடியோக்களும் வைரலாகிவருகின்றன.

 ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம், பெரும்பாலானவர்களுக்கு பிடித்த படங்களில் ஒன்றாக மாறிவிட்டது. ஜெயிலர் திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கும் பாடல்களும் சூப்பர் ஹிட்டாகி உள்ளன.  

ஜெயிலர் பாடல் வைரல்

தமன்னா பாட்டியா நடித்துள்ள ஜெயிலர் திரைப்படத்தின் காவலா என்ற ட்ரெண்டிங் பாடலுக்கு பெண்கள் குழுவொன்று கும்மாளம் போடும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த கிளிப் இணையவாசிகளை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது, ஏனெனில் இது 'மற்ற சக பயணிகளுக்கு தொல்லை கொடுக்கும் செயல்' என்று சமூக ஊடகங்களில் இந்தப் பெண்களை கழுவிக் கழுவி ஊத்துகின்றனர்.

மேலும் படிக்க | ‘கிங் ஆஃப் கோதா’ படம் எப்படியிருக்கு..? டிவிட்டர் விமர்சனம் இதோ..!

ரஜினிகாந்தின் சமீபத்திய வெளியீடான 'ஜெயிலர்' படத்தில் தமன்னா பாடியாவின் 'காவாலா' பாடல் சில வாரங்களாக சமூக ஊடக தளங்களில் ட்ரெண்டிங்கில் உள்ளது. நடிகை தமன்னாவின் பெப்பி டிராக்கில் உற்சாகமான நடிப்பு மற்றும் கவர்ச்சியான ஹூக் ஸ்டெப்கள், பலரையும் ஈர்த்துள்ளது. இதுவரை, ஆயிரக்கணக்கான இணைய பயனர்கள் தங்கள் வீடியோக்களை டிரெண்டிங் பாடலுக்கு ஏற்றவாறு பகிர்ந்துள்ளனர்.

இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட பல வீடியோக்களில், ரயிலில் நடனமாடும் அழகான இளம்பெண்களின் வீடியோ, பல நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்தது. ஆனால் அது சில நெட்டிசன்களுக்குப் பிடிக்கவில்லை. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி, இன்ஸ்டாகிராமில் ஏற்கனவே 3 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்துள்ளது. இருப்பினும், ரயிலுக்குள் சிறுமிகள் நடனமாடும் வீடியோக்களுக்கு பயனர்கள் கடுமையாக பதிலளித்து தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

சில பயனர்களோ ஒரு படி மேலே சென்று, பொதுப் போக்குவரத்து வாகனங்களுக்குள் யாரும் நடனமாடக்கூடாது என்று தடை விதிக்க வேண்டும் என்று கண்டிக்கின்றனர்.

ஜெயிலர் திரைப்படம்

கடந்த 5 ஆண்டுகளில் ரஜினிகாந்தின் படங்களுக்கு கிடைக்காத அமோக வரவேற்பு பெற்று, மிகப் பெரிய சாதனையை ‘ஜெயிலர்’ திரைப்படம் படைத்து வருகிறது. ரஜினிகாந்தின்  இந்தத் திரைப்படத்தில் நடித்துள்ள தமன்னாவின் அழகும், ஸ்டைலும் காவாலா படத்தில் ஹிட்டான ஒரு பாடல் ஆகும். 

மேலும் படிக்க | சந்திரயான்-3 பட்ஜெட் இவ்வளவு தானா... ஆதிபுருஷ் படத்தை வம்பிழுக்கும் ரசிகர்கள்!

ஜெயிலர் படைத்த சாதனை

500 கோடி ரூபாயை கடந்து வசூலில் சாதனை படைத்த ரஜினியின் ஜெயிலர் திரைபப்டம் பல சாதனைகளை படைத்துள்ளதாக, பலரும் பட்டியலிட்டாலும், இதுவரை தமிழ் சினிமாவில் வெளிவந்த படங்களிலேயே பல சாதனைகளை செய்துள்ளது.  

ஜெயிலர் -நட்சத்திரங்கள்

ஜெயிலர் படத்தில் இந்திய திரையுலகை சேர்ந்த பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்திருந்தனர். இந்தி நடிகர் ஜாக்கி ஷ்ராஃப், மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ் குமார், தமன்னா உள்ளிட்டோர் கேமியோ கதாப்பாத்திரத்தில் வந்தனர். படத்தின் வில்லனாக மலையாள நடிகர் விநாயகன் நடித்திருந்தார். இவரது கதாப்பாத்திரத்திற்கு ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்தனர். 

மேலும் படிக்க | ஜெயிலர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு! இரண்டு OTT தளங்களில் சூப்பர்ஸ்டாரை ரசிக்கலாம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News