சீண்டிய நபரின் தலையை திடீரென கவ்விய மலைப்பாம்பு: துடித்த நபர், திகிலூட்டும் வைரல் வீடியோ

Python Attack Viral Video: பயந்த சுபாவமாக இருந்தால் நீங்கள் இந்த வீடியோவை கண்டிப்பாக பார்க்க வேண்டாம். மலைப்பாம்பின் திடீர் தாக்குதல் இணையத்தை கலங்கடித்து வருகிறது.  

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 14, 2022, 12:49 PM IST
  • பாம்புகள் மிகவும் கொடூரமான மற்றும் அதிகப்படியான ஆபத்தை விளைவிக்கக்கூடிய விலங்குகள்.
  • மனிதர்கள் பெரும்பாலும் பாம்புகளிடமிருந்து விலகி இருக்கவே விரும்புகிறார்கள்.
  • எனினும், சிலர் விளையாட்டுத்தனத்தால், அபாயத்தை பற்றி சிறிதும் கலவலைப்படாமல் இவற்றை அவ்வப்போது வம்பிழுக்கிறார்கள்.
சீண்டிய நபரின் தலையை திடீரென கவ்விய மலைப்பாம்பு: துடித்த நபர், திகிலூட்டும் வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

பாம்புகள் மிகவும் கொடூரமான மற்றும் அதிகப்படியான ஆபத்தை விளைவிக்கக்கூடிய விலங்குகள். மனிதர்கள் பெரும்பாலும் பாம்புகளிடமிருந்து விலகி இருக்கவே விரும்புகிறார்கள். எனினும், சிலர் விளையாட்டுத்தனத்தால், அபாயத்தை பற்றி சிறிதும் கலவலைப்படாமல் இவற்றை அவ்வப்போது வம்பிழுக்கிறார்கள். ஆனால், பெரும்பாலும் தங்களை சீண்டுபவர்களுக்கு பாம்புகள் உடனடியாக பதிலடி கொடுத்து விடுகின்றன. உடனடியாக பழிவாங்கி விடுகின்றன. 

தற்போது இதைக் காட்டும் ஒரு வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இது ஒரு ராட்சத மலைப்பாம்பிடம் எக்கச்சக்கமாக சிக்கிக்கொள்ளும் நபர் பற்றியது. அந்த நபர் எதைப் பற்றியும் யோசிக்காமல் மலைப்பாம்பின் அருகில் அமர்ந்து அதை சீண்டத் தொடங்குகிறார். சிறிது நேரம் அனைத்தும் சாதாரணமாக உள்ளது. ஆனால், பொறுமை தாங்காமல் அடுத்த கணமே மலைப்பாம்பு அவரைப் பிடிக்கிறது.

மேலும் படிக்க | மச்சினிச்சி போட்ட ஆட்டத்துக்கு மாப்பிள்ளையின் ரியாக்ஷன்; வைரல் 

தலையை கவ்விய மலைப்பாம்பு 

சமூகவலைத்தளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், மலைப்பாம்புடன் விளையாடியதால் ஒரு நபருக்கு நடந்த விபரீதத்தை காண முடிகின்றது. அந்த நபர் மலைப்பாம்புடன் விளையாடிக்கொண்டு, சீண்டிக்கொண்டிருந்தார். ஆனால், அது பாம்புக்கு பிடிகவில்லை. பார்த்துக்கொடிருக்கும்போதே, சினம் கொண்டு வெளிவந்த பாம்பு, துள்ளிக் குதித்து அந்த மனிதனின் தலையை கவ்விக்கொண்டது. வலி தாங்க முடியாமல் அந்த நபர் சத்தமாக கத்த ஆரம்பித்தார். அவரைக் காப்பாற்ற பலர் வந்தனர். எனினும், பாம்பு நபரின் தலையை விடாப்பிடியாக பிடித்திருந்ததால், அவரது நிலைமை மோசமானது.

திகிலூட்டும் அந்த வீடியோவை இங்கே காணலாம்: 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by @laris_a9393

எதையும் யோசிக்காமல் பாம்பு போன்ற உயிரினங்களுடன் விளையாடுபவர்களுக்கு இந்த வீடியோ ஒரு பாடமாக அமைந்துள்ளது. இந்த வீடியோ laris_a9393andwild.tough என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்கள் கிடைத்து வருகின்றன. இணையவாசிகளும் இதற்கு பல கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 

மேலும் படிக்க | நண்பேண்டா... மானுக்கு ‘கிளை’ கொடுத்த குரங்கு... இணையவாசிகள் மனம் கவர்ந்த வீடியோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News