96 மற்றும் ராட்சசன் படத்தை குறித்து இயக்குனர் ஷங்கர் டிவிட்!

விஜய் சேதுபதியின் ‘96’ மற்றும் விஷ்ணு விஷாலின் ‘ராட்சசன்’ படத்தை புகழ்ந்து தள்ளிய இயக்குனர் ஷங்கர்.

Last Updated : Oct 15, 2018, 12:48 PM IST
96 மற்றும் ராட்சசன் படத்தை குறித்து இயக்குனர் ஷங்கர் டிவிட்! title=

விஜய் சேதுபதியின் ‘96’ மற்றும் விஷ்ணு விஷாலின் ‘ராட்சசன்’ படத்தை புகழ்ந்து தள்ளிய இயக்குனர் ஷங்கர்.

சமீபத்தில் விஜய் சேதுபதியின் ‘96’ மற்றும் விஷ்ணு விஷாலின் ‘ராட்சசன்’ ஆகிய 2 படங்கள் திரையில் வெளியானது. 

இயக்குநர் பிரேம்குமார் இயக்கத்தில், விஜய்சேதுபதி, த்ரிஷா, தேவதர்ஷினி ஆகியோரின் நடிப்பில் வெளியான படம் 96. இந்தப் படம் வெளியாகி, வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதேபோல், இப்படத்துடன் வெளியான ராட்சசன் திரைப்படத்தை ராம்குமார் இயக்கி விஷ்ணுவிஷால், அமலாபால் ஆகியோர் நடித்து இருந்தனர். இந்த படமும் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் வெற்றி மழையில் நனைந்துகொண்டு வரும் இந்த இரண்டு படங்கள் குறித்து இயக்குனர் ஷங்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெகுவாக பாராட்டி டிவிட் பதிவு செய்துள்ளார். அதில், 96..தனிப்பட்ட முறையில் உங்களால் ஒன்றிணைய முடியும். அதுதான் இப்படம் சிறப்பம்சம். விஜய் சேதுபதி அற்புதமாக நடித்துள்ளார். த்ரிஷாவைக் காண்பது உற்சாகமாக உள்ளது. பிரேம்குமாருக்கு வாழ்த்துகள்.ராட்சசன்-இன்னொரு சுவாரசியமான படம். இயக்குநர் ராம்குமாரின் பெயர் வருகிறபோது பார்வையாளர்கள் கைத்தட்டுவதைக் காணும்போது மகிழ்ச்சியாக உள்ளது. அவர் அதற்குத் தகுதியானவர்.

 

 

இவ்வாறு பதிவு செய்துள்ளார்.

Trending News