நிவர் புயல் செய்திகள் உடனுக்குடன் வேண்டுமா? TN Smart செயலியை Download செய்யவும்

TN-SMART Mobile App செயலியை பதிவிறக்கம் செய்து நிவர் புயல் தொடர்பான அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளுங்கள். தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் உருவாக்கப்பட்ட ஒரு பிரத்யேக செயலி (App) இது

Written by - Malathi Tamilselvan | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Nov 25, 2020, 04:09 PM IST
  • TN Smart செயலியை Download செய்து நிவர் புயல் செய்திகள் உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும்
  • தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை வாரியம் உருவாக்கிய பிரத்யேக செயலி இது
  • 2018ஆம் ஆண்டு மாநில முதலமைச்சர் எடப்பபடி பழனிச்சாமி அவர்கள் TN Smart செயலியை அறிமுகப்படுத்தினார்
நிவர் புயல் செய்திகள் உடனுக்குடன் வேண்டுமா? TN Smart செயலியை Download செய்யவும் title=

TN-SMART Mobile App செயலியை பதிவிறக்கம் செய்து நிவர் புயல் தொடர்பான அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளுங்கள். தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் உருவாக்கப்பட்ட ஒரு பிரத்யேக செயலி (App) இது... #NivarCyclone மற்றும் அதன் விளைவாக பெய்யும் மழை / காற்றின் வேகம் மற்றும் உங்களுக்குத் தேவையான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் TN-SMART Mobile App கொடுக்கிறது.  2018ஆம் ஆண்டு மாநில முதலமைச்சர் எடப்பபடி பழனிச்சாமி அவர்கள் TN Smart செயலியை அறிமுகப்படுத்தினார்

இந்த செயலி இருந்தால் போதும், நீங்கள் செய்தி சேனல்களை பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.  உண்மையான, சரியான தகவல்களை தெரிந்துக் கொள்ளலாம். அவ்வப்போது செயலி தொடர்பான வழக்கமான புதுப்பிப்புகள் மொபைலுக்கு நேரடியாக வழங்கப்படும்... தமிழ்நாடு அரசு அதிகாரிகளின் இந்த முயற்சி மாநிலத்தில் வசிக்கும் மக்கள் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.  

TN-SMART மொபைல் செயலி
மக்களுக்கு முன்னெச்சரிக்கை (alert) கொடுப்பதற்காக TN-SMART மொபைல் செயலியை தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் பிரத்யேகமாக வடிவமைத்து அறிமுகப்படுத்தியுள்ளது. இது பதிவுசெய்யப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் alertகளை அனுப்பும்.

இந்த செயலியின் மூலம், பேரழிவு சாத்தியங்கள், எச்சரிக்கைகள், மழையின் அளவு, பேரிடர் காலத்தில் செய்ய வேண்டியவை/ செய்யக்கூடாதவை மற்றும் வெள்ளம் ஏற்பட்டால் என்ன செய்வது என பல பயனுள்ள தகவல்கள் கொடுக்கப்படும். சுனாமி, சூறாவளி போன்ற பேரழிவுகளின் போது, பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு அலாரம் (alert) செல்லும். அவர்கள் செய்தியைப் பார்த்த பின்னரே அலாரம் நிறுத்தப்படும்.

TN-SMART மொபைல் செயலியை எப்படி நிறுவுவது?

கூகிள் பிளே ஸ்டோரில் (Google Play store) ‘டி.என்-ஸ்மார்ட்’ (TN-SMART) என்று தேடி, இந்த மொபைல் செயலியை நிறுவலாம்.

அல்லது பின்வரும் இணைப்பைக் கிளிக் செய்தும் TN-SMART செயலியை பதிவிறக்கம் செய்யலாம். 

TN-SMART 

Also Read | cyclone Nivar: மெட்ராஸ் அணு மின் நிலையம் பாதிக்கப்படுமா?  

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையானசெய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News