துர்கா தேவியை சாந்தப்படுத்தும் பக்தர்களின் தீ பந்து விளையாட்டு வீடியோ வைரல்

துர்கா தேவியை வழிபடும் தீப்பந்துகளை பக்தர்கள் வீசி விளையாடும் தூத்தேதாரா தீ சடங்கு

Written by - Malathi Tamilselvan | Last Updated : Apr 25, 2022, 05:10 PM IST
  • எரியும் பனை ஓலைகளை தூக்கி வீசி விளையாடும் பக்தர்கள்
  • இது துர்க்கை அன்னையை வழிபடும் சடங்கு
  • கர்நாடகாவில் பாரம்பரிய திருவிழா சடங்கு
துர்கா தேவியை சாந்தப்படுத்தும் பக்தர்களின் தீ பந்து விளையாட்டு வீடியோ வைரல்  title=

கட்டேல்: மதச்சடங்குகள் என்பது ஒரே மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் இடத்திற்கு இடம் மாறுபடுகிறது. சிலர் சாத்வீகமான முறையில் வழிபாடுகள் நடத்தினால், வேறு பலர் தீவிரமான பக்தியில் வழிபாடு செய்வார்கள்.

இந்து மதத்தை சேர்ந்தவர்களின் சடங்குகளும் சம்பிரதாயங்களும் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகின்றனர். கர்நாடகாவின் தனித்துவமான சடங்குகளைக் குறிக்க பக்தர்கள் ஒருவருக்கொருவர் நெருப்பு பந்துகளை வீசி விளையாடும் ஒரு மத நிகழ்வு அக்னி கேளி ஆகும்.

கர்நாடகாவின் மங்களூருவுக்கு அருகில் உள்ள ஒரு கோவிலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் தூத்தேரா அல்லது ‘அக்னி கேளி’ சடங்கு நடத்துகிறார்கள்.

இந்த மதச் சடங்கின் ஒரு பகுதியாக எரியும் பனை ஓலைகளை ஒருவர் மீது மற்றொருவர் வீசுவதைக் காண முடிந்தது.

மேலும் படிக்க | பாச மலர்களா என்று கேட்க வைக்கும் குட்டி பையன்களின் வீடியோ
 
பல நூற்றாண்டு பழமையான பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக, கர்நாடகா மாநிலம் கட்டீல் நகரில் அமைந்துள்ள கோவிலில் துர்கா தேவியை வழிபடும் வகையில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் ஒன்றுகூடி தீபச் சடங்கு நடத்தினர். அது வீடியோவாக எடுக்கப்பட்டு சமூக ஊடகங்களில் வைரலானது.

அந்த வைரல் வீடியோ, துர்காபரமேஸ்வரி கோவிலில் உள்ள அன்னை துர்க்கையை திருப்திப்படுத்தும் விதமாக இந்த சடங்கு நடத்தப்படுவதைக் காட்டுகிறது.

பல நூற்றாண்டுகள் பழமையான இந்த சம்பிரதாயத்தில் தீயை அணைக்கும் சடங்கு 'அக்னி கேளி' என்று அழைக்கப்படுகிறது. வெறும் மார்போடு, வேட்டி அணிந்த ஆண்கள் ஒருவருக்கொருவர் எரியும் பனையோலைகளை வீசி விளையாடுகின்றனர். 

சடங்கின் ஒரு பகுதியாக, ஆண்கள் காவி நிற வேட்டிகளை மட்டுமே அணிந்திருப்பார்கள். இந்த வித்தியாசமான சடங்கைக் காண ஏராளமானோர் அங்கு கூடியிருந்தனர். சடங்கு சுமார் 15 நிமிடங்கள் நடைபெறுகிறது, இந்த சடங்கு முடிந்த பிறகு பக்தர்கள் கோயிலுக்குள் நுழைகிறார்கள்.

மேலும் படிக்க | ரிஷ்ப் பன்டுக்கு தமிழில் ஸ்கெட்ச் போட்ட அஸ்வின் வீடியோ

ஆன்லைனில் வெளிவந்த திருவிழாவின் படங்கள் மற்றும் வீடியோக்களில், ஆண்கள் காவி நிற வேட்டியணிந்து ஒருவர் மீது மற்றொருவர் தீ வீசிக் கொள்வது தெரிகிறது.

வீடியோவை இங்கே பாருங்கள்:

அக்னி கேளி சடங்கு என்றால் என்ன?

ஆண்டுதோறும் எட்டு நாட்கள் தொடர்ந்து இக்கோயிலில் நடைபெறும் பெரும் திருவிழாவின் ஒரு பகுதியாக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தில் "தூத்தேதார" அல்லது "அக்னி கேளி" சடங்கு நடைபெறுகிறது. 

சடங்குகளின்படி, ஆண்கள் இரண்டு குழுக்களாகப் பிரிந்து ஒருவரையொருவர் எதிர்கொள்வார்கள். ஒரு குழுவினர், மற்றுமொரு குழுவின்மீது எரியும் பனை ஓலைகளை தூரத்திலிருந்து வீசுகிறார்கள். குழுவில் உள்ள ஒவ்வொருவரும் ஐந்து எரியும் பனையோலைகளை வீச அனுமதிக்கப்படுகிறார்கள். 

திருவிழாவின் எட்டு நாட்களும் விரதம் கடைப்பிடிதக்கும் பக்தர்கள் , இறைச்சி மற்றும் மது அருந்துவதைத் தவிர்ப்பார்கள். தீக்காயம் அடைந்த அனைவருக்கும் குங்குமப்பூ (குங்குமப்பூ மற்றும் மஞ்சளால் செய்யப்பட்ட சிவப்புப் பொடி) தண்ணீர் தெளிக்கப்படுகிறது.

நந்தினி ஆற்றின் நடுவில் உள்ள ஒரு தீவில் அமைந்துள்ள துர்காபரமேஸ்வரி கோயில், கர்நாடகாவின் தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள கட்டீலில் உள்ள பழமையான கோயில்களில் ஒன்றாகும்.

மேலும் படிக்க | வாழ்க்கையில இதெல்லாம் சகஜமப்பா ஆனா அதுக்குன்னு இப்படியா

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News