Viral Video: பானை செய்யும் பூனை... குயவனாய் மாறிய க்யூட் பூனையை ரசிக்கும் நெட்டிசன்கள்!

Cat Viral Video: பூனைகள் உண்மையில் மனிதர்களுடன் பேசுகின்றன என்கின்றனர் விலங்குகளின் நடத்தை குறித்த நிபுணர்கள். அவை தனக்கு தெரிந்த வழியில் பேசுகின்றன, உணர்ச்சிகளை பகிர்ந்து கொள்கின்றன எனவும் கூறுகின்றனர். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 1, 2023, 01:15 PM IST
  • ஒரு சூட்டிகையான குட்டி பூனையின் வீடியோ.
  • பூனை ஒன்று அழகாக மண்பானை செய்வதைக் காணலாம்.
  • வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகள் தினம் தினம் மனிதர்களை பரவசத்துக்கு ஆளாக்குபவை.
Viral Video: பானை செய்யும் பூனை... குயவனாய் மாறிய க்யூட் பூனையை ரசிக்கும் நெட்டிசன்கள்! title=

விலங்குகள் எப்போதும் நமக்கு ஆச்சர்யங்களையும், ஆனந்த அதிர்ச்சிகளையும்  அள்ளிக் கொடுக்க வல்லன. அதிலும் வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகள் தினம் தினம் மனிதர்களை பரவசத்துக்கு ஆளாக்குபவை. அதில் நாய்களும் பூனைகளும் முதலிடம் வகிக்கின்றன. வீட்டில் வளர்க்கும்போது அவை வீட்டில் ஒருவராகவே வளரும். செல்ல பிராணிகள் செய்யும் குறும்புகள், செயல்கள் எல்லாமே ரசிக்கும்படி இருப்பவை. பூனைகள் உண்மையில் மனிதர்களுடன் பேசுகின்றன என்கின்றனர் விலங்குகளின் நடத்தை குறித்த நிபுணர்கள். அவை தனக்கு தெரிந்த வழியில் பேசுகின்றன, உணர்ச்சிகளை பகிர்ந்து கொள்கின்றன எனவும் கூறுகின்றனர். அந்த வகையில் பூனை ஒன்று பானை செய்யும் அசத்தலான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வைரலான வீடியோவில், அழகான குட்டி பூனை ஒன்று அழகாக மண்பானை செய்வதைக் காணலாம். எல்லா விதமான மன அழுத்தங்களையும் ஒதுக்கி வைத்துவிட்டு பதற்றமில்லாமல் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த வீடியோ வரப்பிரசாதம் எனலாம். வைராகும் வீடியோவை கீழே கண்டு ரசியுங்கள்.

 

 

மேலும் படிக்க | Viral Video: மெஸ்ஸியை மிஞ்சும் ‘மியாவ்’... பூனைகளின் அசத்தலான புட்பால் மேட்ச்!

எதையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற சிலருக்கு இருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இங்கே அப்படிப்பட்ட ஒரு சூட்டிகையான  குட்டி பூனையின் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளது. பூனை ஒன்று பானை செய்ய கற்றுக் கொள்ளும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒரு நபர், பானை செய்வதை வீடியோவில் காணலாம். அவருக்கு அருகில் அமர்ந்திருக்கும் பூனை, அவரிடம் இருந்து வித்தையை கற்றுக் கொள்ள ஆர்வமாக இருக்கிறது. அந்த நபர் பானை செய்யும் விதத்தை  உற்று பார்த்துக் கொண்டிருப்பதையும் வீடியோவில் காணலாம். பூனை மிகுந்த ஆர்வத்துடன் குயவரின் சக்கரத்தில் உள்ள களிமண் பானையை தொட்டு தொட்டு பார்க்கிறது. சுழலும் சக்கரம் மீது எப்படி பானை சுற்றுகிறது என்பதை அறிய பூனை முயற்சி செய்கிறது என்பதையும் வீடியோவில் காணலாம்  இந்த வைரல் வீடியோ, ட்விட்டரில், Buitengebieden என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. ‘Powtery’ என்று தலைப்பிடப்பட்டு இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | Viral Video: கதையல்ல நிஜம்... பாட்டிலில் கல்லை போட்டு தாகத்தை தீர்த்துக் கொண்ட காகம்!

மேலும் படிக்க | Viral Video: தும்பிக்கையில சிக்க மாட்டேங்குதே... கூடைப்பந்துடன் போராடும் குட்டியானை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News