கண்ணால் பேசிய மணப்பெண், மாப்பிள்ளை கொடுத்த கியூட் பதில்: வைரல் வீடியோ

Funny Wedding Video: மணமக்கள் திருமண மேடையிலேயே காதல் பார்வைகளை பரிமாறிக்கொள்ளும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இது பார்ப்பதற்கு மிகவும் கியூட்டாக உள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 26, 2022, 11:03 AM IST
  • இணையத்தில் நாம் பல வீடியோக்களை தினமும் காண்கிறோம்.
  • சமீப காலங்களில் திருமண வீடியோக்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.
  • இவை வெளிவந்த உடனேயே மிக வேகமாக வைரலும் ஆகின்றன.
கண்ணால் பேசிய மணப்பெண், மாப்பிள்ளை கொடுத்த கியூட் பதில்: வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: இணையத்தில் நாம் பல வீடியோக்களை தினமும் காண்கிறோம். சமீப காலங்களில் திருமண வீடியோக்கள் இணையத்தை கலக்கி வருகின்றன. இவை வெளிவந்த உடனேயே மிக வேகமாக வைரலும் ஆகின்றன. திருமணம் என்பது அனைவரது வாழ்விலும் மிகவும் முக்கியமான நிகழ்வாகும். திருமண தின நிகழ்வுகளை நாம் நம் மனதில் எப்போதும் நினைத்துப் பார்க்கிறோம். திருமணத்தில் பல வகையான தருணங்கள் மக்களை மிகவும் மகிழ்விக்கின்றன. நாட்டின் பல்வேறு இடங்களில் பல்வேறு சடங்குகளுடன் திருமணங்கள் நடக்கின்றன. திருமணத்தில் பல தினுசில் காட்சிகள் காணப்படுகின்றன. 

திருமணம் தொடர்பான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் சீரான இடைவெளியில் பகிரப்படுகின்றன. இவற்றில் ஒவ்வொரு முறையும் மணமகன் மற்றும் மணமகள் மற்றும் திருமணத்துக்கு வந்துள்ள விருந்தினர்களின் பல வித வேடிக்கைகளும் கேளிக்கைகளும் காணக்கிடைக்கின்றன. திருமணங்களில் நடக்கும் வேடிக்கையான சில விஷயங்கள் விருந்தாளிகளை மட்டுமல்லாமல், இணையவாசிகளும் ஆச்சரியப்படுகின்றன, அதிர்ச்சியடைகின்றன. 

மேலும் படிக்க | ‘ஏம்மா..கல்யாணத்துல கூட டோரேமான் பாட்டா?’: கியூட் மணப்பெண்ணின் வைரல் வீடியோ

இப்போது மீண்டும் ஒரு திருமணம் தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ளது. அதில் மணமகன் மற்றும் மணமகளின் கியூட் ஸ்டைலை காண முடிகின்றது. மனமக்கள் மண மேடையில் அமர்ந்திருப்பதை காண முடிகின்றது. திடீரென இருவருக்கும் இடையிலாம காதல் அதிகரிக்கத் தொடங்குகிறது. 

காதல் மிகுதியில் மணமகனும், மணமகளும் 

சமூகவலைத்தளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், திருமண சடங்குகளுக்காக மணமக்கள் மணமேடையில் அமர்ந்திருப்பதை காண முடிகின்றது. அனால், இருவரது கவனமும் சடங்குகளில் இருப்பது போல தெரியவில்லை. இருவரும் ஒருவரை ஒருவர் காதலுடன் காண்பதிலேயே கவனமாக உள்ளனர். முதலில் மணமகள் மணமகனை நோக்கி காதல் பார்வையை வீசுகிறார். பின் மணமகனும் மணமகளை ஆசையாக பார்க்கிறார். திருமண மண்டபத்திலேயே இருவரும் காதல் பார்வைகளை வீசிக்கொள்கின்றனர். 

மணமக்களின் காதல் சொட்டும் வீடியோவை இங்கே காணலாம்:

 

திருமண வீடியோ வைரலானது

திருமணம் தொடர்பான இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியான உடனேயே வைரலாகி வருகிறது. இந்த வீடியோ bridal_lehenga_designn என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவுக்கு நெட்டிசன்களும் வழக்கம் போல் தங்கள் பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகின்றனர். இதற்கு ஏகப்பட்ட லைக்குகளும் வியூஸ்களும் கிடைத்துள்ளன. இந்த வீடியோவை பார்த்தால், மணமக்கள் ஒருவர் மீது ஒருவர் கொண்டுள்ள உண்மையான காதலும் பாசமும் புரிகிறது.

மேலும் படிக்க | பந்தா காட்டிய மாப்பிள்ளை, இரண்டே நிமிடத்தில் வழிக்கு கொண்டுவந்த மணப்பெண்: வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News