காங்கோ: உங்கள் வீட்டருகில் தங்கம் கொட்டிக்கிடக்கிறது என உங்களுக்கு தெரியவந்தால், நீங்கள் என்ன செய்வீர்கள்? இதில் கேட்பதற்கு என்ன இருக்கிறது? அனைத்து வேலைகளையும் விட்டுவிட்டு, பைகளை எடுத்துக்கொண்டு அந்த இடத்துக்கு போவோம் என்பதுதான் பலரது பதிலாக இருக்கும். ஆப்பிரிக்காவின் காங்கோவிலும் இதேபோன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது.
அங்கு ஒரு இடத்தில், தங்கத்தால் (Gold) நிரம்பிய மலை இருப்பதாக செய்தி பரவியது. இந்த தகவல் கிடைத்த உடனேயே மக்கள் அவசர அவசரமாக அங்கு கூடினர். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
காங்கோவில் தங்கம் நிறைந்த மலை
மத்திய ஆபிரிக்காவில் உள்ள காங்கோ குடியரசில் ஒரு மலை கண்டறியப்பட்டுள்ளது. இந்த மலையில், 60 முதல் 90 சதவீதம் பரப்பளவில் தங்கம் இருப்பதாக கூறப்படுகிறது. அருகிலுள்ள கிராமவாசிகள் இந்த தங்க மலையைப் பற்றி அறிந்தவுடன், அவர்கள் அதிக எண்ணிக்கையில் அங்கு செல்லத் தொடங்கினர்.
தங்கத்தை நிரப்பிக்கொள்ள தங்களுடன் பெரிய பைகளையும் மக்கள் எடுத்துச் சென்றனர். 28 விநாடிகள் கொண்ட வீடியோவை இதுவரை 53 ஆயிரம் பேர் பார்த்துள்ளனர்.
ALSO READ: அதிசய நதி: ஜார்கண்டின் இந்த நதியில் தங்கம் கிடைக்கிறது
தங்கத்தை எடுத்துச்செல்ல போட்டி
தங்க மலையில் சுரங்கப் பணிகள் நடந்து வருவதை கிராம மக்கள் அறிந்தவுடன், அவர்களும் தங்கத்தை எடுத்துக்கொள்ள அங்கு சென்றனர். இந்த சம்பவத்தின் வீடியோவை பத்திரிகையாளர் அகமது அல்கோபரி ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அவர் வீடியோவை பகிர்ந்த உடனேயே அது வைரலாகியது (Viral Video). வீடியோவின் தலைப்பில், அவர், “காங்கோவில் வசிக்கும் மக்கள் தங்கம் நிறைந்த மலையைப் பற்றி அறிந்ததும் அதிர்ச்சியடைந்தனர், ஆச்சரியமடைந்தனர்” என்று எழுதினார்.
A video from the Republic of the Congo documents the biggest surprise for some villagers in this country, as an entire mountain filled with gold was discovered!
They dig the soil inside the gold deposits and take them to their homes in order to wash the dirt& extract the gold. pic.twitter.com/i4UMq94cEh— Ahmad Algohbary (@AhmadAlgohbary) March 2, 2021
சுரங்க பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது
காங்கோவின் பல பகுதிகளில் தங்கம் அதிக அளவில் உள்ளது. அத்தகைய சூழ்நிலையில், தங்கத்திற்காக மேற்கொள்ளப்படும் சுரங்கப்பணிகள் (Gold Mining) அங்கு பொதுவானவைதான். இருப்பினும், இந்த குறிப்பிட்ட தங்க மலையைப் பற்றி கேள்விப்பட்டவுடன் ஏராளமான கிராம மக்கள் அங்கு சென்றதால், சுரங்கப் பணிகளை சிறிது நேரம் நிறுத்த வேண்டியிருந்தது.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR