Google Doodle தலைவணங்கும் கூடைப்பந்து விளையாட்டை உருவாக்கிய Naismith

மிகவும் பிரபலமான விளையாட்டுகளில் ஒன்றான கூடைப்பந்து விளையாட்டை உருவாக்கியவர் டாக்டர் ஜேம்ஸ் நைஸ்மித் கிட்டத்தட்ட 130 ஆண்டுகளுக்கு முன்பு குளிர்காலத்தில் மாணவர்களை ஊக்குவிப்பதற்காக "தடகள கவனச்சிதறல்" (“athletic distraction”) என்ற உபாயத்தை அவர் கண்டறிந்தார்.   

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 1, 2021, 08:05 PM IST
  • கூடைப்பந்து விளையாட்டை உருவாக்கியவர் Naismith
  • அவருக்கு மரியாதை செலுத்துகிறது Google Doodle
  • மாணவர்களின் உடற்தகுதிக்கு விளையாட்டு அவசியம்
Google Doodle தலைவணங்கும் கூடைப்பந்து விளையாட்டை உருவாக்கிய Naismith title=

புதுடெல்லி: விளையாட்டுத் துறைக்கு மகத்தான பங்களிப்பு செய்ததற்காக, கனடா மற்றும் அமெரிக்க உடற்கல்வி ஆசிரியர் மற்றும் பயிற்சியாளரான ஜேம்ஸ் நைஸ்மித் (James Naismith) என்ற மாபெரும் விளையாட்டு கண்டுபிடிப்பாளருக்கு, கூகுள் நிறுவனத்தின் தேடுபொறியான கூகுள்  டூடுல் மரியாதை செலுத்துகிறது.   

டாக்டர் ஜேம்ஸ் நைஸ்மித் மிகவும் பிரபலமான விளையாட்டுகளில் ஒன்றான கூடைப்பந்தாட்டத்தை கண்டுபிடித்தார் மிகவும் பிரபலமான விளையாட்டுகளில் ஒன்றான கூடைப்பந்து விளையாட்டை உருவாக்கியவர் டாக்டர் ஜேம்ஸ் நைஸ்மித் கிட்டத்தட்ட 130 ஆண்டுகளுக்கு முன்பு குளிர்காலத்தில் மாணவர்களை ஊக்குவிப்பதற்காக "தடகள கவனச்சிதறல்" (“athletic distraction”) என்ற உபாயத்தை அவர் கண்டறிந்தார்.   

ஜேம்ஸ் நைஸ்மித்தின் நினைவாக, கூகுள் டூடுல் இன்று கூடைப்பந்து மற்றும் நைஸ்மித்துடன் இரண்டு குழந்தைகள் விளையாடுவதை சித்தரிக்கும் அனிமேஷனை அர்ப்பணித்தது. இந்த அனிமேஷனைக் கிளிக் செய்தால், அவரைப் பற்றி பேசும் பல்வேறு பக்கங்களுக்கு கூகுள்  உங்களை கொண்டு செல்லும். அங்கு நைஸ்மித் மற்றும் கூடைப்பந்தாட்டத்துடனான அவரது உறவைப் பற்றி படிக்கலாம்.  

Also Read | T10 League 2021: 26 பந்துகளில் 89 ரன்கள் எடுத்து நிக்கோலஸ் பூரன் அபார சாதனை  
 
1861ம் ஆண்டு நைஸ்மித் நவம்பர் 6ஆம் தேதியன்று Ontario என்ற ஊரில் பிறந்தார். புகழ்பெற்ற மெக்கில் பல்கலைக்கழகத்தில் (McGill University) உடற்கல்வி கல்வியைப் பயின்றார். நைஸ்மித்க்கு சிறுவயதிலிருந்தே விளையாட்டுகளில் ஆர்வம் அதிகம்.

அமெரிக்கா சென்றா நைஸ்மித்,   மாசசூசெட்ஸில் உள்ள ஒய்.எம்.சி.ஏ சர்வதேச பயிற்சி கல்லூரியில் உடற்கல்வி துறையில் சேர்ந்து மாணவர்களுக்கு கற்பித்தார்.
நைஸ்மித் கூடைப்பந்தாட்ட உதவியுடன் நிறுவனமயக்கப்பட்ட இனவெறியை அகற்ற முயன்றார் என்பது குறிப்பிட்டுச் சொல்லக்கூடியது.

மாணவர்கள் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் தங்களைத் தாங்களே நிர்வகிக்க வேண்டும் என்பதும், ஆரோக்கியமாக இருப்பதற்கு உடல்ரீதியான தகுதி தேவை என்பதன் அடிப்படையில் நைஸ்மித் கூடைப்பந்து விளையாட்டை கண்டுபிடித்தார்.  

Also Read | Australian Open: தனிமைப்படுத்தல் முடிந்த நிலையில், சூடு பிடிக்கும் டென்னிஸ் களம்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News