கரணம் தப்பினால் மரணம்! வீடியோ பார்ப்பவர்களிடம் எல்லாம் திட்டு வாங்கும் வைரல் இளைஞர்

Shocking Terrace Jump Video Viral: இள ரத்தன்னாலும் இப்படி ரிஸ்க் எடுக்கச் சொல்லுதா? திட்டித் தீர்க்கும் நெட்டிசன்கள் வீடியோ வைரல்! அப்படி என்ன அப்பாடக்கடர் வீடியோ இது? நீங்களே பார்த்து தெரிஞ்சுக்கோங்க

Written by - Malathi Tamilselvan | Last Updated : Mar 20, 2023, 02:52 PM IST
  • இள ரத்தன்னாலும் இப்படி ரிஸ்க் எடுக்கச் சொல்லுதா?
  • திட்டித் தீர்க்கும் நெட்டிசன்கள் வீடியோ வைரல்!
  • பீதியை கிளப்பும் ஸ்டண்ட் வீடியோ
கரணம் தப்பினால் மரணம்! வீடியோ பார்ப்பவர்களிடம் எல்லாம் திட்டு வாங்கும் வைரல் இளைஞர் title=

Viral Video Of The Day: உயரமான கட்டிடத்தில் இருந்து ஒருவர் திடீரென ஓடி வந்து குதிக்கும் வீடியோ பார்க்கவே பகீரென்று இருக்கிறது. ஒரு மாடியில் இருந்து பல அடி தூரத்தில் இருக்கும் மற்றொரு கட்டடத்தில் தாவி ஏறும் இளைஞனின் வீடியோ அதிர்ச்சியையும் கோபத்தையும் வரவைக்கிறது. இந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகிறது. அப்போது என்ன நடந்தது என்று நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.

சிலருக்கு ஸ்டண்ட் செய்வது மிகவும் பிடிக்கும். வாய்ப்பு கிடைத்தால், இவர்கள் ஆபத்தான ஸ்டண்ட்களை எளிதாக செய்து விடுவார்கள். இவர்களில் பெரும்பாலோர் சிறிய ஸ்டண்ட்களை மட்டுமே செய்கிறார்கள். ஆனால் சிலருக்கு ஆபத்தான ஸ்டண்ட் செய்யும் பழக்கம் உள்ளது. சமூக வலைதளங்களில் இது போன்ற வீடியோக்கள் அதிக அளவில் பதிவிடப்படுகிறது.

சமூக ஊடகங்களில் அண்மையில் வெளியாகி வைரலாகும் ஒரு ஸ்டண்ட் வீடியோ ஒன்று அனைவராலும் பரபரப்பாக பேசப்படுகிறது. வைரலாகும் இந்த வீடியோவில் ஒரு இளைஞன் ஒரு கட்டிடத்திலிருந்து மற்றொரு கட்டிடத்திற்கு குதிக்கும் காட்சி மிகவும் அதிர்ச்சியளிக்கிறது.

ஆபத்தான ஸ்டண்ட் செய்யும் இளைஞர்
சமூக வலைதளங்களில் தலைப்புச் செய்தியை பிடித்துள்ள இந்த வீடியோவில், கட்டிடத்தின் மேற்கூரையில் ஒருவர் வேகமாக ஓடத் தொடங்குவதைக் காணலாம். அவருக்குப் பின்னால் இன்னொருவரும் அந்த காட்சியை கேமராவில் பதிவு செய்வதற்காக அவரை தொடர்ந்து ஓடுகிறார்.

உண்மையில் சில விநாடிகள் கடந்த பிறகுதான், வீடியோவில் நடப்பதை சரியாக புரிந்துக் கொள்ள முடிகிறது. முதலில் இரு நபர்கள் ஓடுவதைப் பார்க்கும்போது, ஒருவர் கோபத்தில் ஓட, மற்றொருவர், அவர் குதித்துவிடாமல் இருக்க அவரை பிடிக்கச் செல்வதாகவே தோன்றுகிறது.

மேலும் படிக்க | viral Video: முதலைக்கு சவால் விட்ட முதியவருக்கு நேர்ந்த கதி: நீங்களே பாருங்க..!

ஆனால் நடந்தது அதிர்ச்சியளிக்கிறது. வீடியோவை இங்கே பாருங்கள்

ஓடும் நபர் குதித்து நேராக நிற்கும் மற்றொரு கட்டிடத்தின் மொட்டை மாடியில் குதிக்கிறார் என்பதையும், பின்னால் ஓடிவரும் நபர் கையில் உள்ள கேமராவில் முன்னால் ஓடும் நபரை வீடியோ எடுக்கிறார் என்பதும் புரிந்து அதிர்ச்சி ஏற்படுகிறது.

மேலும் படிக்க | காதலி கொடுத்த இன்ப அதிர்ச்சி: குஷியில் ஷாக் ஆன காதலன், வைரல் வீடியோ!!

உண்மையில் மாடியில் இருந்து மற்றொரு கட்டத்தின் மொட்டை மாடியில் குதிக்கும் நபர் செய்யும் சாகசம் மிகவும் ஆச்சரியமானது என்றாலும், அதை பார்க்கும் வேறு யாரும் அவ்வாறு செய்து விடக்கூடாது என்று பயம் ஏற்படுகிறது.

சாகசம் செய்யும் இளைஞர், ஒரு பறவை பறந்து செல்வது போல், அநாயாசமாக மாடி டூ மாடி குதிப்பது ஆச்சரியமாக இருப்பதால், இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

இது போன்ற காட்சிகளை நீங்கள் இதற்கு முன் படங்களில் மட்டுமே பார்த்திருக்க வேண்டும். பொதுவாக இதுபோன்ற காட்சிகளை யாரும் அவ்வளவு ரிஸ்க் எடுத்து செய்வதில்லை.

இருப்பினும், இத்தகைய ஸ்டண்ட் மிகவும் ஆபத்தானது. காணொளியை பார்க்கும் அனைவருக்கும், வேறு யாரும் இதுபோல செய்து ஆபத்தில் சிக்கிக் கொள்ளக்கூடாது என்று பதைபதைக்கின்றனர். இந்த வீடியோவிற்கு ஆயிரக்கணக்கான பார்வைகளையும் லைக்குகளும் கிடைத்தாலும், இள ரத்தம் பயமறியாது... என்பது போன்ற கமெண்டுகளை அதிகம் பார்க்க முடிகிறது.

மேலும் படிக்க | மானை கபளீகரம் செய்யும் கொமோடோ டிராகன்! இதயம் பலவீனமானவர்கள் பார்க்க வேண்டாம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News