இணையத்தை கலக்கும் Hardik Pandya-வின் வாட்ச்: விலையை கேட்டால் ஷாக் ஆகிடுவீங்க!!

ஹார்திக் பாண்டியா இன்ஸ்டாகிராமில் புதிய கைக்கடிகாரம் அணிந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். ஹார்திக்கின் இந்த கைக்கடிகாரம் இணையத்தில் ஒரு பரபரப்பை உருவாக்கியுள்ளது.   

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 24, 2021, 04:04 PM IST
இணையத்தை கலக்கும் Hardik Pandya-வின் வாட்ச்: விலையை கேட்டால் ஷாக் ஆகிடுவீங்க!! title=

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ஹார்திக் பாண்டியா மிக குறுகிய காலத்தில் தனது வாழ்க்கையில் பெரிய அளவு வெற்றியை அடைந்துள்ளார். ஹார்திக் பாண்டியா ஆடம்பர வாழ்க்கைக்காக அறியப்படுகிறார்.

ஹார்திக் பாண்டியா மிக குறுகிய காலத்தில் உலக கிரிக்கெட்டில் அதிக அளவிலான செல்வத்தையும் புகழையும் பெற்றார். ஐபிஎல் 2021 இன் (IPL 2021) அடுத்த கட்ட போட்டிகளில் விளையாட  ஹார்திக் பாண்டியா இப்போது துபாயை அடைந்துள்ளார்.

ஹார்திக்கின் கடிகாரம் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது

ஹார்திக் பாண்டியா இன்ஸ்டாகிராமில் புதிய கைக்கடிகாரம் அணிந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். ஹார்திக்கின் இந்த கைக்கடிகாரம் இணையத்தில் ஒரு பரபரப்பை உருவாக்கியுள்ளது. 

ஹார்திக் பாண்டியாவின் (Hardik Pandya) கடிகாரத்தின் விலையை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். ஹார்திக் பாண்டியாவின் இந்த கடிகாரத்தின் விலை ரூ .5 கோடிக்கும் மேலாகும்.

ஹார்திக்கின் இந்த கடிகாரம் மிகவும் சிறப்பு வாய்ந்தது

ஹார்திக் பாண்டியாவின் இந்த கடிகாரம் படேக் பிலிப் நாட்டிலஸ் பிளாட்டினம் 5711 (Patek Philippe Nautilus Platinum 5711) பிராண்ட் கைக்கடிகாரமாகும். ஹார்திக் பாண்டியா மற்றும் அவரது சகோதரர் க்ருனால் பாண்டியா ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களது கடின உழைப்பே அவர்களை இன்று இந்த மேம்பட்ட நிலைக்கு கொண்டு சென்றுள்ளது. இருவரும் சமூக ஊடகங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ALSO READ: ‘சகோதரா நீ வேற லெவல், உனக்கு உலகையே கொடுக்கலாம்’ கிருணாலுக்காக உருகிய ஹார்திக் பாண்ட்யா

பாண்டியா பிரதர்ஸ் விலையுயர்ந்த கடிகாரங்கள் மற்றும் வாகனங்களை விரும்புகிறார்கள்

ஹர்திக் பாண்டியா மற்றும் அவரது சகோதரர் க்ருனால் பாண்டியா ஆகியோர் விலையுயர்ந்த கடிகாரங்கள் மற்றும் வாகனங்களை விரும்புகிறார்கள். சகோதரர்கள் இருவரும் மும்பையில் 30 கோடி மதிப்புள்ள ஒரு சொகுசு ஃப்ளாட் வாங்கியுள்ளனர். 

ஹர்திக் பாண்டியா மற்றும் அவரது சகோதரர் க்ருனால் பாண்டியாவின் இந்த குடியிருப்பில் 8 படுக்கையறைகள் உள்ளன. பாண்டியா சகோதரர்களின் ஆடம்பரமான வீடு 3838 சதுர அடியில் கட்டப்பட்டுள்ளது.

ALSO READ: Watch: ஜூனியர் ஹார்டிக் பாண்ட்யாவை கொஞ்சி விளையாடும் நடாசா ஸ்டான்கோவிக்!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News