மனிதர்களை பொறுத்தவரை, இன்றைய வாழ்க்கை முறை, திருமண வயதை கடந்து திருமணம் செய்து கொள்ளுதல், உடல் நல பிரச்சனைகள் போன்றவற்றால், இயல்பான கருத்தரிப்பு நேராத சூழ்நிலையில், செயற்கை கருத்தரிப்பு IVF முறை பயன்படுத்தப்படுகிறது. இம்முறையில், பெண்ணின் கருமுட்டை மற்றும் விந்தணுக்களை இணைத்து கருத்தரிக்கப்படுகிறது. கரு குறிப்பிட்ட வளர்ச்சி அடைந்ததும் முழுவளர்ச்சி அடைய கர்ப்பப்பைக்குள் வைக்கப்படுகிறது. இந்த முறையில் பிறக்கு குழந்தை டெஸ்ட் ட்யூப் பேபி எனவும் அழைக்கப்படுகிறது.
இந்த வகை சிகிச்சை, அரிய வகை மாடுகளை பாதுகாக்கவும் பயன்படுத்தப்பட்டு வெற்றி பெறப்பட்டுள்ளது. உலகிலேயே குட்டையான மாடுகளான புங்கனூர் இன மாடுகளின் எண்ணிக்கை 500க்கும் குறைவாகவே உள்ளன. 2022 ஆம் ஆண்டு, புங்கனூர் இனத்தின் முதல் IVF கன்று மஹாராஷ்டிராவின் அகமதுநகரில் சனிக்கிழமை பிறந்ததால், கால்நடை பராமரிப்புத் துறையினருக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்தது.
ALSO READ | தனது உயரத்தால், விமானத்தின் உயர் வகுப்பில் பயணம் செய்த உயர்ந்த மனிதர்!
"இந்தியாவின் முதல் IVF கன்று புங்கனூர் மாடு மகாராஷ்டிராவில் உள்ள அகமதுநகரில் பிறந்தது" என்று கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை (DAHD) அறிவித்துள்ளது.
மீன்பிடி, கால்நடை வளர்ப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள DAHD, உள்நாட்டு கால்நடைகளை பாதுகாக்கும் நோக்கத்துடன் தேசிய பால் உற்பத்திக்கு குறிப்பிடத்தக்க ஊக்கத்தை அளிக்கும் திறன் மேம்பாட்டு திட்டத்தினையும் தொடங்கியுள்ளது.
"நாட்டு வகை மாடுகளின் பால், நோய்களை எதிர்த்துப் போராடும் வகையில் அதிக ஊட்டச்சத்துக்களைகொண்டுள்ளது" என்று அதிகாரி ஒருவர் கூறினார்.
பல காரணங்களால், இந்தியாவில் கடந்த பல தசாப்தங்களாக நாட்டு இன கால்நடைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இப்போது கால்நடை பராமரிப்புத் துறையானது உள்நாட்டின், அரிதான வகை பசுக்களைப் பாதுகாக்க கால்நடைகளுக்கு IVF பயன்பாட்டை ஊக்குவிக்கிறது.
பன்னி, தர்பாகர் மற்றும் ஓங்கோல் இனங்களுக்கும் DAHD இதேபோன்ற முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
முன்னதாக எருமை வகைகளில் இது வெற்றிகரமாக சோதித்து பார்க்கபப்ட்டுள்ளது. அக்டோபரில், இந்தியாவின் முதல் பன்னி எருமை IVF கன்று குஜராத்தின் சோம்நாத் மாவட்டத்தில் பிறந்தது, அதே சமயம் ராஜஸ்தானில் உள்ள சூரத்கர் IVF தொழில்நுட்பத்தின் மூலம் கருத்தரிக்கப்பட்ட தர்பாகர் இனத்தின் முதல் பெண் கன்று பிறந்ததைப் பதிவு செய்தது.
ALSO READ | தாகம் எடுத்த பாம்புக்கு தண்ணீர் கொடுக்கும் தருமப்பிரபு: வைரலாகும் வீடியோ
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR