காதலியை கவர் செய்ய ஜிம்முக்கு போகலையா பாஸ்? கங்காருவை கலாட்டா செய்யும் நெட்டிசன்கள்

Kangaroo Exercise Video Viral: காதல் என்றாலே அதில் போட்டி இல்லாமலா? மனிதர்களில் மட்டுமல்ல, விலங்குகளுக்கும் காதலியை கவர பிரம்ம பிரயத்தனம் செய்யவேண்டுமாம்! இது ஆராய்ச்சி சொல்லும் சேதி மட்டுமல்ல, எக்சர்சைஸ் செய்து முஷ்டியை உயர்த்தும் கங்காரு காதலனின் வைரல் வீடியோ...  

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 4, 2023, 12:46 AM IST
  • பெண்களை கவர்ந்திழுக்க கங்காரு செய்யும் டிரிக்
  • கங்காருவுக்கும் காதல்ல போட்டியா?
  • பெண் துணையைக் கவர கங்காரு செய்யும் காதல் எக்சர்சைஸ்
காதலியை கவர் செய்ய ஜிம்முக்கு போகலையா பாஸ்? கங்காருவை கலாட்டா செய்யும் நெட்டிசன்கள்

Viral Exercise Video: சமூக ஊடகங்களில் பார்த்து ரசிக்கப்படும் வீடியோக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியையும் நிறைவையும் தருகின்றன. பற்பல அதிசயங்களையும் ஆச்சரியங்களையும் நாம் பார்க்கவே முடியாத விஷயங்களையும் நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்துகின்றன. அதிலும் விலங்குகளின் காதல் கதைகளும், இணையைக் கவர அவை செய்யும் முயற்சிகளும் கஷ்டங்களும் அனைவரையும் ரசிக்க வைக்கின்றன. அந்த ரசனைக்குரிய வீடியோக்கள் அனைவரையும் நெகிழ வைக்கின்றன.

சமூக ஊடகங்களில் வீடியோ 

இணையத்தில் வினோதமான வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு பலராலும் ரசித்து பார்க்கப்படுகின்றன. அதிலும் விலங்குகளின் கசமுசா காதல், மோதல், கொஞ்சல், பிடிவாதம் என அவற்றின் மனோபாவங்களை வெளிக்காட்டும் வீடியோக்கள் அதிகமாக பகிரப்பட்டு, அவை லட்சக்கணக்கில் லைக்குகளை அள்ளுகின்றன.

மேலும் படிக்க | Tiger Video: சுருண்டு கிடக்கும் புலியை சீண்டினால் என்னவாகும்! வைரலாகும் புலிவேட்டை வீடியோ

விலங்குகளின் காதலையும், ஊடலையும் பார்த்து மகிழ வாய்ப்புகளைக் கொடுக்கும் சமூக ஊடகங்களில், வித்தியாசமான வீடியோக்களில் ஒன்று கங்காருவின் காதல் வீடியோ. கங்காருவின் காதல் வீடியோ, சமூக ஊடகத்தில் தற்போது வைரலாகிறது. இந்த வீடியோ எப்படி இருக்கிறது? பார்த்துச் சொல்லுங்கள்...

கங்காரு வைரல் வீடியோ

இந்த வீடியோவைப் பார்த்தால் காதல் என்பது கங்காருவுக்கும் போட்டிக்கு பிறகே சாத்தியம் என்று தெரிகிறது.  

மேலும் படிக்க | நெல்லிக்காயாய் சிதறும் பாம்புகள்! பார்த்தால் வயிற்றைப் பிரட்டும் பாம்பு வீடியோ வைரல்

பெண்களை கவர முஷ்டி மடக்கும் கங்காரு

மனிதர்கள் மட்டும் அல்ல, விலங்குகளும் தங்கள் இணையை ஈர்க்க எக்சர்சைஸ் செய்து உடல் பலத்தைக் காட்டுகின்றான. மனித ஆண்களைப் போல ஆண் கங்காருக்களும், பிற போட்டியாளர்களிடம் இருந்து காதலியை கைப்பற்ற உடலை விரித்து, நிமிர்ந்து நின்று போஸ் கொடுக்கின்றன. 

பெரிய பைசெப்ஸ் கொண்ட ஆண் கங்காருக்களையே பெண்கள் தங்கள் காதல் ஜோடியாக தேர்ந்தெடுக்குமாம்...  வலிமையின் அடையாளமாக உள்ள கங்காரு, பெண்களின் காதலைப் பெற அசடு வழியுமோ???

மேலும் படிக்க | 'சீக்கிரம்டா..வந்துட போறாரு': ஆப்பிள் திருடும் கில்லாடி குரங்குகள், சிரிக்க வைக்கும் வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

More Stories

Trending News