CAA-க்கு வித்தியாசமான முறையில் எதிர்ப்பு தெரிவித்த கேரளா தம்பதி!

கேரளாவை சேர்ந்த மணமக்கள் தங்கள் திருமண புகைப்படங்களில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Last Updated : Dec 23, 2019, 06:16 PM IST
CAA-க்கு வித்தியாசமான முறையில் எதிர்ப்பு தெரிவித்த கேரளா தம்பதி! title=

கேரளாவை சேர்ந்த மணமக்கள் தங்கள் திருமண புகைப்படங்களில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷில் இருந்து துன்புறுத்தப்பட்ட முஸ்லிம் அல்லாத புலம்பெயர்ந்தோருக்கான குடியுரிமையை விரைவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்ட குடியுரிமை (திருத்த) சட்டம் தொடர்பாக நாடு முழுவதும் எதிர்ப்புக்கள் வெடித்து வருகின்றன.

போராட்டத்தின் நிலைமை மிகவும் மோசமாக உறுவெடுத்துள்ள நிலையில்., மக்கள் தங்கள் திருமண புகைப்பட படப்பிடிப்புகள் மூலம் கூட இந்த செயலுக்கு எதிராக தங்கள் கருத்தை தெரிவிக்க முயற்சித்து வருகின்றனர்.

குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் குடிமக்களின் தேசிய பதிவுக்கு எதிராக சுவரொட்டிகளை வைத்திருந்த கேரள தம்பதியினர் அருண் கோபி மற்றும் ஆஷா தங்கள் கைகளில் 'NO CAA' என குறிப்பிடப்பட்ட பதாகைகளை வைத்திருப்பதினை நாம் பார்க்கலாம். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

GL அருண் கோபி மற்றும் ஆஷா சேகர் ஆகியோர் 2020 ஜனவரி 21-ஆம் தேதி திருமணம் செய்துக்கொண்டனர். இவர்களது திருமணத்திற்கு முன்னதாக திருமணத்திற்கு முந்தைய படப்பிடிப்பு நடைப்பெற்றது. இந்த படப்பிடிப்பின் போது தான் இந்த திருமண ஜோடி, இந்திய அரசு நிறைவேற்றிய சட்டத்திற்கு எதிராக தங்கள் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

சர்ச்சைக்குரிய குடியுரிமைச் சட்டம் மற்றும் பாரதீய ஜனதா கட்சி அகில இந்திய குடிமக்களின் தேசிய பதிவேடு குறித்த வாக்குறுதியை எதிர்த்து ஆயிரக்கணக்கான மக்கள் இந்தியா முழுவதும் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இது இந்திய முஸ்லிம்களை துன்புறுத்துவதற்கான ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படும் என்று பலர் நம்புகின்றனர். முன்னதாக, டெல்லியின் ஜாமியா மிலியா இஸ்லாமியா மற்றும் அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் நடந்த ஆர்ப்பாட்டங்களை அடக்குவதற்கு டெல்லி காவல்துறையினர் வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறப்படுவதால், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.

இந்த வன்முறையை தொடர்ந்து தீவிரமடைந்த போராட்டங்களால் நாடு முழுவதும் தற்போது கொந்தளிப்பில் உள்ளது. இந்நிலையில் தற்போது இந்த கேரளா மணமக்கள் தங்கள் கோபத்தினை வெளிப்படுத்தும் விதமாக 'NO CAA' என குறிப்பிடப்பட்ட பதாகைகளை கொண்டு தங்கள் எதிர்ப்பினை பதிவு செய்துள்ளனர்.

Trending News