Mahat and Prachi: மகத்-பிராய்ச்சி தம்பதிக்கு ஆண் குழந்தை, இணையத்தில் போட்டோ வைரல்

மகத் (Mahat Raghavendra) மற்றும் பிராய்ச்சி மிஸ்ரா (Prachi Mishra) தம்பதிக்கு தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 8, 2021, 01:59 PM IST
Mahat and Prachi: மகத்-பிராய்ச்சி தம்பதிக்கு ஆண் குழந்தை, இணையத்தில் போட்டோ வைரல் title=

நடிகரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவருமான மகத், கடந்த ஆண்டு பிராய்ச்சி மிஸ்ராவை திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் பிராய்ச்சி மிஸ்ரா கர்ப்பம் ஆனார் என்பதும் கர்ப்பமான மற்றும் வளைகாப்பு  புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகத் பதிவு செய்திருந்தார். 

இந்த நிலையில் மகத் (Mahat Raghavendra) மற்றும் பிராய்ச்சி மிஸ்ரா (Prachi Mishra) தம்பதிக்கு தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது. இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் மகத் பதிவு செய்துள்ளார். அதில்., 

ALSO READ | Motherhood: சிம்புவின் ‘ஒஸ்தி’ கதாநாயகின் தாய்மை தவழும் வைரல் புகைப்படங்கள்

 

தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது மிகவும் மகிழ்ச்சி என்றும் தங்களுக்கு வாழ்த்து தெரிவித்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார். மேலும் தான் அப்பாவாக மாறியுள்ளது குறித்து மிகப் பெரிய மகிழ்ச்சி அடைவதாகவும் இந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

பிராச்சி மிஸ்ரா மற்றும் குழந்தையின் புகைப்படத்தையும் அவர் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது.

ALSO READ | அருண் விஜய் - அறிவழகன் காம்போ 'பார்டர்' படம் ஓடிடியில் வெளியாகிறதா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News