Motherhood: சிம்புவின் ‘ஒஸ்தி’ கதாநாயகின் தாய்மை தவழும் வைரல் புகைப்படங்கள்

மயக்கம் என்ன, ஒஸ்தி போன்ற பிரபல திரைப்படங்களில் நடித்த ரிச்சா கங்கோபாத்யாய் அழகான குழந்தைக்கு தாயாகி இருக்கிறார்.  

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Jun 5, 2021, 08:12 PM IST
  • குழந்தைக்கு தாயான ஒஸ்தி நாயகி
  • மயக்கம் என்ன என்று மயக்கியவர் தாய்மையில் மயங்கினார்
  • லூகா என்று மகனுக்கு பெயர் சூட்டினார் ரிச்சா
Motherhood: சிம்புவின் ‘ஒஸ்தி’ கதாநாயகின் தாய்மை தவழும் வைரல் புகைப்படங்கள் title=

மயக்கம் என்ன, ஒஸ்தி போன்ற பிரபல திரைப்படங்களில் நடித்த ரிச்சா கங்கோபாத்யாய் அழகான குழந்தைக்கு தாயாகி இருக்கிறார். அவர் குழந்தையின் பெயரையும் புகைப்படங்களையும் சமூக ஊடகங்களில் பகிர்ந்திருக்கிறார். அவை வைரலாகின்றன.

முன்னணி நடிகர்களான தனுஷ் மற்றும் சிம்பு ஆகியோருடன் தமிழில் அடுத்தடுத்த படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை ரிச்சா. தனுஷ் மற்றும் சிம்புவுடன் ஜோடி போட்ட கதாநாயகி ரிச்சாவின் அழகு தமிழ் ரசிகர்களை கட்டிப்போட்டது. மயக்கம் என்ன திரைப்படத்தில் கனமான பாத்திரத்தை இயல்பாக நடித்து பெயர் வாங்கினார் ரிச்சா

2019 ஆம் ஆண்டில் ரிச்சாவுக்கு திருமணம் நடைபெற்றது.  புகழின் உச்சத்தில் இருந்தபோதே தனது நீண்டகால காதலரான ஜோவுடன் திருமணம் செய்துகொண்ட ரிச்சா.

அண்மையில் தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்தார். தற்போது ரிச்சா தனது மகனின் சில புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.

மகனின் பெயர் லூகா என்று வைத்திருக்கிறார்கள். "ஒளியைக் கொடுப்பவர்" என்ற பொருள் தரும் பெயரைக்கொண்ட உன்னை நாங்கள் எப்போதும் இப்படி பொக்கிஷமாகவே வைத்திருக்க விரும்புகிறோம்!” எனசமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார் ரிச்சா.

Also Read | அருண் விஜய் - அறிவழகன் காம்போ 'பார்டர்' படம் ஓடிடியில் வெளியாகிறதா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News