தனது மகனின் ஜூம் வகுப்பிற்குள் நிர்வாணமாக நுழைந்த தாய்... அதிர்ந்து போன ஆசிரியர்..!

தனது மகனின் ஜூம் ஆன்லைன் வகுப்புக்கு நடுவே தாய் நிர்வாணமாக நடந்து சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்..!

Last Updated : Oct 21, 2020, 11:36 AM IST
தனது மகனின் ஜூம் வகுப்பிற்குள் நிர்வாணமாக நுழைந்த தாய்... அதிர்ந்து போன ஆசிரியர்..!

தனது மகனின் ஜூம் ஆன்லைன் வகுப்புக்கு நடுவே தாய் நிர்வாணமாக நடந்து சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்..!

உலகம் முழுவதும் தீவிரமாக பரவிவரும் கொரோனா தொற்று காரணமாக, பல மாதங்களாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது. இருப்பினும் மாணவர்களின் படிப்புக்கு எந்த பாதிப்பும் வரக்கூடாது என ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகிறது கல்வி நிர்வாகம். வீட்டிலிருந்து ஆன்லைன் வகுப்பு மூலம் பயிலும் போது வேடிக்கையான சம்பவங்களும் நிகழ்கிறது. அந்த வகையில், இது போன்ற வேசிக்கையான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. 

தனது மகனின் ஜூம் ஆன்லைன் வகுப்புக்கு நடுவே தாய் நிர்வாணமாக நடந்து சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இந்த சம்பவத்தின் வீடியோவை ட்விட்டர் பயனர் யங் சிம்பா ஆன்லைனில் பகிர்ந்து கொண்டார், “ஜூம் வகுப்புகள் மனிதனை ஒழிக்கின்றன” என்ற தலைப்பில். இதனை அவர் பகிர்ந்து கொண்டார். மேலும் ஜூம் வகுப்புகளை நிறுத்துங்கள் வேண்டாம் என்ற வேண்டுகோளையும் அதில் பலர் முன்வைத்து வருகின்றனர். 

ALSO READ | ஆன்லைன் வகுப்பின் போது 7 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த 18 வயது இளைஞர்..!

சுமார் 15 விநாடிகள் நீளமுள்ள அந்த வீடியோவில், ஒரு சிறுவன் பின்னால் யாரையோ சுட்டிக்காட்டுகிறான். சிறிது நேரம் கழித்து, அவரது தாயாகத் தோன்றும் ஒரு பெண் அந்த வீடியோ ஃப்ரேமுக்குள் நுழைகிறார். அப்போது, அவர் சிறிது கூட ஆடை இல்லாமல் முற்றிலும் நிர்வாணமாக இருக்கிறார். பின்னர் ஆசிரியர் நிலைமையைப் பற்றி மாணவருக்கு எச்சரிக்க முயற்சி செய்கிறார், விரைவில் சிறுவனை கேமராவை அணைக்குமாறு கத்த ஆரம்பிக்கிறார்.

“அடக் கடவுளே, நிர்வாணமாக யார் அங்கே? உன் கேமராவை அணை , உன் வீடியோ கேமராவை நிறுத்து என்று அவர் கத்துவதை இந்த வீடியோவில் கேட்க முடிகிறது. அந்தப் பெண் இவ்வாறு கேமரா இயங்கிக் கொண்டிருப்பதை உணர்ந்தவுடன், உடனடியாக அந்த வீடியோ ஃப்ரேமில் இருந்து விலகி ஓடுகிறார்.

இந்த டியோவை டிவிட்டரில் பதிவு செய்த சில மணி நேரங்களில், சுமார் 6 மில்லியனுக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டது மற்றும் 1.3 லட்சம் தடவைகள் மறு ட்வீட் செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோவிற்கு பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருக்கின்றனர். 

More Stories

Trending News