ஐஸ்க்ரீம் சாப்பிட்ட பூனை, ஆசையாய் தடவிக்கொடுத்த குரங்கு: சோ ஸ்வீட் வைரல் வீடியோ

Funny Animal Video: அட.. விலங்குகளுக்கு இடையில் இப்படி எல்லாம் கூட நடக்குமா என நம்மை ஆச்சரியப்படுத்தும் ஒரு வீடியோ இணையத்தில் பகிரப்பட்டுள்ளது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 6, 2023, 09:59 AM IST
  • இந்த வீடியோ சமூக வலைதளமான ட்விட்டரில் @buitengebieden என்ற கணகில் பகிரப்பட்டுள்ளது.
  • இதுவரை இந்த வீடியோவுக்கு 10 லட்சத்திற்கும் அதிகமான வியூஸும் 24000 க்கும் அதிகமான லைக்சும் கிடைத்துள்ளன.
  • இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்ள்.
ஐஸ்க்ரீம் சாப்பிட்ட பூனை, ஆசையாய் தடவிக்கொடுத்த குரங்கு: சோ ஸ்வீட் வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன.

சமூக வலைதளங்களில் அடிக்கடி தோன்றும் விலங்குகள் மற்றும் பறவைகளின் வீடியோக்கள் மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன. இந்த நாட்களில் மக்கள் அதிக அளவில் விலங்குகளின் வீடியோக்களை விரும்பி பார்க்கிறார்கள். நாம் நம்ப முடியாத பல விஷயங்களை விலங்குகள் செய்கின்றன. இவை நம்மை அதியசயிக்க வைக்கின்றன. பொதுவாக நாய், பூனை, குரங்கு, பாம்பு, புலி, சிங்கம் போன்ற விலங்குகளுக்கு இணையத்தில் அதிக க்ரேஸ் உள்ளது. இவற்றின் வீடியோக்கள் பதிவிடப்பட்ட உடனேயே சமூக ஊடகங்களில் வைரல் ஆகின்றன. 

குரங்கு வீடியோகளுக்கென இணையத்தில் தனி ஈர்ப்பு உள்ளது. குரங்குகளின் கோமாளித்தனத்தையும் அவை செய்யும் சேட்டைகளையும் இணையவாசிகள் விரும்பி பார்க்கிறார்கள். சமூக ஊடகங்களில் குரங்குகளின் பல குறும்பு வீடியோக்கள் அவ்வப்போது பகிரப்படுகின்றன. குரங்குகள் செய்யும் பல வித குறும்புகளை நாம் பல வீடியோக்களில் பார்த்துள்ளோம். சில சமயம் இவை மனிதர்களுக்கு ஆபத்தை விளைவித்து நம்மை பீதியில் ஆழ்த்துகின்றன. சில சமயம் மிக கியூட்டான விஷயங்களை செய்து நம்மை ஆச்சரியப்படுத்துகின்றன. 

பூனை மீது அன்பை பொழிந்த குரங்கு

பூனைக்கும் குரங்குக்கும் இடையில் இருக்கும் பந்தத்தை காட்டும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. இது மிக கியூட்டாக உள்ளது. இதை பார்த்தால் ஒரு புறம் சிரிப்பு வந்தாலும், ஒரு புறம் மனம் நெகிழ்கிறது. வீடியோவில் பூனை ஒன்று மிகவும் மகிழ்ச்சியுடன் ஐஸ்கிரீம் சாப்பிடுவதை காண முடிகின்றது. அதன் பின்னால் ஒரு குரங்கு அமர்ந்து அதை பார்த்துக்கொண்டிருக்கிறது. வீடியோ தொடங்கும் போது குரங்கு மற்றும் பூனையின் இந்த நெருக்கம் காணப்படுகிறது. ஆனால், வீடியோவின் முடிவில் பூனை திரும்பி, 'யார் என்னை தொந்தரவு செய்வது?' என்பது போல பார்க்கிறது. பூனை பார்த்தவுடன் குரங்கும் அதை தடவிக்கொடுப்பதை நிறுத்தி விடுகிறது. 

பூனை மற்றும் குரங்கின் அற்புதமான அந்த வீடியோவை இங்கே காணலாம்:

மேலும் படிக்க | கிளைமேக்ஸில் என்ட்ரியாகி கடத்தல்காரர்களுக்கு செக் வைத்த நாய் வீடியோ வைரல்

வீடியோ இணையத்தில் வைரல் ஆனது

இந்த வீடியோ சமூக வலைதளமான ட்விட்டரில் @buitengebieden என்ற கணகில் பகிரப்பட்டுள்ளது. இதுவரை இந்த வீடியோவுக்கு 10 லட்சத்திற்கும் அதிகமான வியூஸும் 24000 க்கும் அதிகமான லைக்சும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்ள்.  மேலும் 1000 க்கும் மேற்பட்டோர் இந்த வீடியோவை ரீ ட்வீட் செய்துள்ளனர்.

'இந்த வீடியோவை பார்க்க மிக ஆசையாக உள்ளது' என ஒரு பயனர் எழுதியுள்ளார். 'குரங்குகளுக்கு இவ்வளவு பொறுமை உள்ளதா என ஆச்சரியமாக இருக்கிறது' என மற்றொரு பயனர் தனது ஆச்சரியத்தை வெளிப்படுத்தியுள்ளார். குரங்கு காட்டும் பாசம் அனைவரையும் வியக்க வைக்கும் வண்ணம் உள்ளது. மிக அரிதான இந்த காட்சி இணையவாசிகளின் இதயங்களை இளக வைத்துள்ளது என்று கூறினால் அது மிகையாகாது.

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிக்க | நீங்கள் நம்லைன்னாலும் அது தான் நிஜம்... பறவையை தாக்கி கொன்ற மீன்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News