விளம்பர படப்பிடிப்பில் சாக்ஷி, MS டோனியின் புதிய முயற்சி...

இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் தலைவர் டோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி டோனியின் விளம்பர முயற்சி வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Last Updated : Dec 17, 2019, 11:28 AM IST
விளம்பர படப்பிடிப்பில் சாக்ஷி, MS டோனியின் புதிய முயற்சி... title=

இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் தலைவர் டோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி டோனியின் விளம்பர முயற்சி வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்திய கிரிக்கெட் வீரர்களில் பெரும்பாலோர் தங்களது தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையைப் பற்றி பல்வேறு சமூக ஊடக தளங்களில் அடிக்கடி இடுகையிடுகையில், முன்னாள் இந்திய கேப்டன் MS டோனி எல்லாவற்றையும் ரகசியமாக வைக்க முயற்சிக்கிறார், அரிதாகவே அவர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர், இன்ஸ்டாகிராம் அல்லது பேஸ்புக் கணக்கில் எதையாவது வெளிப்படுத்துகிறார். மேலும் அதற்கான ஒரு கணத்திற்கு அவர் காத்திருக்கின்றார்.

கடந்த ஜூலை மாதம் இங்கிலாந்தில் நடைப்பெற்ற உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி அரையிறுதிப் போட்டிக்கு சென்றது. இதனைத்தொடர்ந்து குறைந்த காலத்திற்கு ஓய்வு அறிவித்துள்ள டோனி மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணம் மற்றும் தென்னாப்பிரிக்கா மற்றும் வங்கதேசத்திற்கு எதிரான உள்நாட்டுத் தொடர்களையும் தவறவிட்டார்.

இந்நிலையில் தனது குடும்பத்துடன் தனது ஓய்வு நேரத்தினை பயன்படுத்தி வரும் டோனி, திங்களன்று தனது மனைவியின் வைரல் வீடியோ ஒன்றினை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவில் சாக்ஷி சிங் டோனியும், டோனியும் ஜோடியாக ஒரு பெட்ரோல் பம்பில் விளம்பர படப்பிடிப்புக்கு தயாராகி வருவதைக் நாம் காணலாம்.

இந்த வீடியோவிற்கு டோனி தலைப்பிடுகையில்., "கடந்த காலத்தில் இருந்து ஒரு குண்டு..." என தலைப்பிட்டுள்ளார். இந்த வீடியோவில் சாக்ஷி டோனி ஆன்லைன் பேமன்ட் குறித்து விழிப்புணர்வு விளம்பரத்தில் நடிக்க முயற்சிப்பதாகவும், சாக்ஷியின் நடிப்பினை டோனி கிண்டல் செய்வது போன்றும் தெரிகிறது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்தியா பிரீமியர் லீக் சீசன் மற்றும் 2019 உலகக் கோப்பைக்குப் பிறகு இரண்டு மாத இடைவெளி எடுத்து தனது இராணுவ படைப்பிரிவுக்கு சேவை செய்ய முன்னாள் இந்திய கேப்டன் முடிவு செய்திருந்தார்.

ராஞ்சி மைந்தன் சமீபத்திய சில வாரங்களில் தனது வணிக ரீதியான கடமைகளில் ஈடுபடுவதைக் காணலாம் மற்றும் விளம்பர படப்பிடிப்புகளுக்காக நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருவதையும் நாம் அவ்வப்போது கண்டு வருகிறோம். 

டோனியின் எதிர்காலம் குறித்து நிறைய பேசப்படும் ஒரு நேரத்தில், இந்தியாவின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி சில நாட்களுக்கு முன்பு ஒரு பிரத்யேக பேட்டியில் "டோனி குறித்து நாம் ஊகிப்பதை விட, இந்தியன் பிரீமியர் லீக் வரை டோனிக்காக காத்திருக்கலாம்" என தெரிவித்திருந்தார்.

Trending News