குரங்கு சேட்டைன்னா இதுதானா? ஷாக்காகும் அழகான பெண்ணும் சில குரங்குகளின் சேட்டையும்!

Monkey Video Trending: குரங்குகளுக்கு பிஸ்கட் கொடுக்க செல்லும் பெண்ணிடம், குரங்குகள் செய்யும் சேட்டையைப் பாருங்களேன்....

Written by - Malathi Tamilselvan | Last Updated : Dec 17, 2023, 07:59 PM IST
  • அழகான பெண்ணுகிட்ட வம்பு பண்ணும் குரங்கு கூட்டம்
  • குரங்குகளின் சுவராசியமான சேட்டை
  • பிஸ்கட் டேஸ்ட் அவ்வளவு மோசமாவா இருக்கும்?
குரங்கு சேட்டைன்னா இதுதானா? ஷாக்காகும் அழகான பெண்ணும் சில குரங்குகளின் சேட்டையும்! title=

வைரல் வீடியோ: வாழ்க்கையில் நாம் சந்திக்கும் பல்வேறு அனுபவங்கள், இறுக்கங்களையும் பிரச்சனைகளையும் கொண்டதாக இருந்தாலும், இன்னல்களையும் சவால்களையும் சந்தித்தாலும், அதிலிருந்து ஏதேனும் ஒரு பாடம் கிடைக்கும். இருந்தாலும், சில விஷயங்கள் நமது கையை மீறிப் போகும்போது ஒன்றும் செய்ய முடியாமல் இருக்க வேண்டிய சூழல் ஏற்படும். இதுபோன்ற அன்றாட பிரச்சனைகளில் இருந்து நமக்கு மாறுதலும், ஆறுதலும் அவசியம் தேவைப்படுகிறது. அதற்கு இன்று சமூக ஊடகங்கள் முக்கிய பங்களிக்கின்றன.

சமூக ஊடகங்கள் இன்று நமக்கு ஒரு நண்பரைப் போல மாறிவிட்டது. மனம் சலித்தாலும் சரி, மகிழ்ச்சியாக இருந்தாலும் சமூக ஊடகங்களை பார்த்து பகிர்ந்து நமது உணர்வுகளையும் எண்ணங்களையும் பரிமாறிக் கொள்கிறோம். அதிலும் கைக்குள் அடங்கிவிடும் மொபைல் போன்கள் வாழ்க்கையையே மாற்றிவிட்டன.  

சமூக ஊடகங்களில் பகிரப்படும் வீடியோக்களில் விலங்குகளின் வீடியோக்களுக்கு பலரும் ரசிகர்களாக மாறிவிட்டனர். நாய், பூனை,பாம்பு, குரங்கு, சிங்கம், புலி ஆகிய மிருகங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகும் வீடியோக்களின் ஹீரோக்கள் என்றே கூறலாம். குரங்குகளின் கோமாளித்தனமும், வேடிக்கையும் அதிகமாக விரும்பி பார்க்கப்படுகின்றன. தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகும் ஒரு குரங்கு வீடியோ ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

குரங்குகளுக்கு பிஸ்கட் கொடுக்க செல்லும் பெண்ணிடம், குரங்குகள் செய்யும் சேட்டையைப் பாருங்களேன்....

வைரலாகி வரும் இந்த வீடியோவில், குரங்குகள் உணவு கொடுக்கும் பெண்ணை எப்படி அவமதித்தன என்பதை பார்க்கலாம். உண்மையில் இப்படி எல்லாம் நடக்குமா என்று யாரும் கற்பனைக்கூட செய்து பார்த்திராத விஷயத்தை எல்லா குரங்குகளும் செய்வதால் ஆச்சரியமடைந்த நெட்டிசன்கள், இந்த வீடியோவை தொடர்ந்து பகிர்ந்து வைரலாக்கிவிட்டார்கள்.

மேலும் படிக்க | மாலை மாற்ற மணமகன் போட்ட நிபந்தனை: முகம் சிவந்த மணமகள், வைரல் வீடியோ

குறும்புத்தனமான விலங்குகளில் குரங்குக்கு முதலிடம் தான். குறும்பு செய்பவர்களை ‘குரங்கு சேட்டை’ என்று சொல்வதை கேள்விப்பட்டிருக்கலாம். குரங்கு, எப்போது என்ன செய்யு  என்பதை யாராலும் யூகிக்க கூட முடியாது. சில சமயம் யாரையாவது அடித்து விடும் என்றால், குரங்குக் கடியும், குரங்குப் பிடியும் எப்போதும் பிரசித்தமானது தான்.

கையில் இருக்கும் பொருட்களை பறித்துக் கொண்டு பறந்துவிடுவதிலும் யாரும் குரங்குகளை மிஞ்சிவிட முடியாது. 

குரங்குகளுக்கு பிஸ்கட் பிடிக்காதா?
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், ஒரு பெண் காரிலிருந்து இறங்கி குரங்கு கூட்டத்தை நோக்கி செல்வதை காணலாம். அந்த பெண் கைகளில் பிஸ்கட்டைப் பிடித்திருக்கிறாள். அவள் பாக்கெட்டைத் திறந்து குரங்குகளுக்கு பிஸ்கட் கொடுக்க ஆரம்பிக்கிறாள்.

மேலும் படிக்க | பேருந்தில் ஏறி கிலி காட்டிய குரங்கு: நம்ப முடியாத வைரல் வீடியோ

பல குரங்குகள் அழகிய அந்தப் பெண்ணை பார்க்கவே இல்லை. சில குரங்குகள் சிறுமியின் கையிலிருந்து பிஸ்கட்டை வாங்கினாலும் அதை மோந்து பார்த்துவிட்டு, தூக்கி வீசுகின்றன. உண்மையில் குரங்குகளுக்கு பிஸ்கட்டை நுகர்ந்து பார்த்து வேண்டாம் என்று சொல்லி நிராகரிக்கவும் தெரியும் என்பது அனைவருக்கும் ஆச்சரியம் அளிக்கிறது.

குரங்குகள் தொடர்ந்து பிஸ்கட்களை வீசியதால் அதிர்ச்சியடைந்த பெண் அங்கிருந்து சென்றுவிட்டார். பொதுவாக குரங்குகள் உணவுப் பொருட்களுக்காக சண்டையிடும். ஒருவரின் கையிலிருந்து உணவை பிடுங்கிக் கொண்டு ஓடிவிஉம். ஆனால் குரங்குகளிடம் வந்து பெண் பிஸ்கட் கொடுத்தாலும் அதை தூக்கி வீசும் குரங்களின் சேட்டையைப் பார்த்து பலரும் ஆச்சரியப்படுகின்றனர்.

saloni_satpute_official என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் வீடியோ பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த வீடியோ 15 லட்சத்துக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவுக்கு பலரும் பலவிதமான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க | 5 ரூபாய்க்கு இத்தனை அலப்பறையா? கேப் டிரைவருடன் வாய்த் தகராறு செய்யும் பெண் வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News