நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஜோடியின் ரொமாண்டிக் டாப் ஆங்கிள் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது..!
தமிழ் திறையுலகின் ஹாட் காதலர்களான நயன்தாரா (Nayanthara) மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் (Vignesh Sivan) ஜோடி தினம் தினம் தங்களது ரசிகர்களுக்கு பல கியூட் புகைப்படங்களை பகிர்ந்து வருக்கின்றனர். கடந்த சில வருடங்களாகவே தீவிரமான காதலித்து வரும் இந்த ஜோடிகள் அடிக்கடி வெளிநாடு சென்று விதவிதமான, நெருக்கமான புகைப்படங்களைப் பகிர்ந்து மற்றவர்களை உசுப்பேத்தி வருகின்றனர்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில், கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘நானும் ரவுடிதான்’. இந்த திரைப்படத்தில் பணியாற்றியபோது இருவரும் காதலித்து தொடங்கினார்கள் என்றும் இவர்களது ஐந்து வருட காதல் இவ்வருடம் முடிவுக்கு வந்து இந்த ஆண்டு திருமணம் நடைபெற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில் கூட இந்த காதல் ஜோடி கோவாவுக்கு சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | நயன்தாரா- விக்னேஷ் திருமணம் எப்போது?.. நயன் எடுத்த அதிரடி முடிவு!!
இந்நிலையில், தற்போது நயன்தாரா-விக்னேஷ் சிவனின் டாப் ஆங்கிள் ரொமான்டிக் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. வீட்டில் எடுக்கப்பட்டது போல் தெரியும் இந்த புகைப்படத்தில் இருவரும் கருப்பு நிற உடை அணிந்து இருவரும் நெருக்கமாக நின்று கொண்டு சென்று கொண்டிருப்பது போல் போஸ் கொடுத்துள்ளனர். டாப் ஆங்கிளில் எடுக்கப்பட்டுள்ள இந்த புகைப்படத்தை நயன்தாரா ரசிகர்கள் ரசித்து வருவதோடு டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. விக்னேஷ் சிவன் இயக்கிவரும் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’, நெற்றிக்கண் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘அண்ணாத்த ஆகிய படங்களில் நயன்தாரா தற்போது நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே.