திருமணத்துக்கு முன்பே கர்ப்பமான பிரபல நடிகைக்கு பெண் குழந்தை....

பிரபல இந்தி நடிகை நேஹா துபியா-வுக்கு அழகான பெண்குழந்தை பிறந்துள்ளது.....

ZEE Bureau ZH Web (தமிழ்) | Updated: Nov 18, 2018, 05:08 PM IST
திருமணத்துக்கு முன்பே கர்ப்பமான பிரபல நடிகைக்கு பெண் குழந்தை....
Representational Image

பிரபல இந்தி நடிகை நேஹா துபியா-வுக்கு அழகான பெண்குழந்தை பிறந்துள்ளது.....

பிரபல இந்தி நடிகையும், மாடல் அழகியுமான நேஹா துபியா கடந்த கடந்த மே மாதம் 10 ஆம் தேதி அங்கத் பேடி என்ற நடிகரை ரகசிய திருமணம் செய்துக் கொண்டார். அவர் திருமணத்தின் போது கர்ப்பமாக இருந்ததாகவும் அதனால் தான்வெளியுலகத்தில் யாரையும் அழைக்காமல், தனது நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்துக் கொண்டார் என்ற தகவல் பரவியது.
 
நேஹா துபியா கர்ப்பமானதால் உடனே திருமணம் செய்து கொண்டோம் என்று அங்கத் பேடி இப்போது தெரிவித்து உள்ளார். இந்நிலையில் கடந்த ஆகஸ்டில் அவர் கர்ப்பமாக இருக்கும் படங்கள் வெளியாகின. திருமணமாகி 3 மாதமே ஆன நிலையில் நேகாவின் வயிறு ஏழெட்டு மாத கர்ப்பிணி போல இருப்பதாக அப்போதும் விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில் திருமணமாகி 6 மாதம் கழிந்திருக்கும் நிலையில் நேகா - அங்கத் தம்பதியினருக்கு அழகான பெண் குழந்தை தற்போது பிறந்துள்ளது. ஒரு புறம் வாழ்த்துகளும், மறுபுறம் விமர்சனங்களும் குவிந்துக் கொண்டிருக்கின்றன இந்தத் தம்பதிக்கு!