அம்ம்ம்மா.... செல்லமா வரவேற்ற மகனை செருப்பாலயே அடித்த தாயின் வைரல் வீடியோ

நீண்ட நாட்களுக்குப் பிறகு வெளிநாட்டில் இருந்து வரும் தனது தாயை வரவேற்க ஒருவர் விமான நிலையத்துக்குச் செல்கிறார். ஆனால் அவருக்கு அங்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.

Written by - ZEE Bureau | Last Updated : Dec 3, 2021, 05:57 PM IST
அம்ம்ம்மா.... செல்லமா வரவேற்ற மகனை செருப்பாலயே அடித்த தாயின் வைரல் வீடியோ

Viral Video: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 

சமூக ஊடகங்களில் (Social Media) பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் (Viral Video) ஆகின்றன.  தற்போது ஒரு வித்தியாசமான வீடியோ வைரலாகி வருகின்றது. 

நீண்ட நாட்களுக்குப் பிறகு வெளிநாட்டில் இருந்து வரும் தனது தாயை வரவேற்க ஒருவர் விமான நிலையத்துக்குச் சென்றிருப்பது வீடியோவில் தெரிகிறது. பாசத்தோடு தனது தாயை அவர் வரவேற்க, அவரது தாயோ அவரை செருப்பால் அடிக்கிறார்.

இந்த வீடியோ பாலஸ்தீனிய-பாகிஸ்தான் இணையவாசியான அன்வர் ஜிபாவியினுடையது. நீங்கள் ஒரு கண்டிப்பான இந்திய குடும்பத்தில் வளர்ந்திருந்தால், உங்களாலும் இந்த வீடியோவுடன் தொடர்பு படுத்திப் பார்த்துக்கொள்ள முடியும்.

ALSO READ: 35 வருடம் காதலிக்காக காத்திருந்த ’ரோமியோ’ - 65 வது வயதில் காதலியை கரம்பிடித்தார் 

விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட வீடியோ

இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோவில், விமான நிலையத்தின் நுழைவு வாயிலுக்கு அன்வர் நடந்து செல்வதைக் காண முடிகின்றது. அன்வர் தனது கையில், 'உன்னை மிஸ் செய்தோம்' என எழுதப்பட்ட பலகையை பிடித்துள்ளார். ஒரு கையில் அன்வர் ஒரு பூங்கொத்தையும் வைத்திருக்கிறார்.

விமான நிலையத்தை (Airport) விட்டு வெளியே வந்த அன்வரின் தாயார் அந்த பிளக்ஸ் கார்டைப் பார்க்கிறார். யாரும் எதிர்பார்க்காத விதமாக, அவர் தனது செருப்பைக் கழட்டி அன்வரை அடிக்கத் துவங்குகிறார். ஒன்றல்ல, இரண்டல்ல, அன்வரின் தாய் அவர் மீது செருப்பு மழை பொழிகிறார்.

வீடியோ வைரல் ஆனது

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக (Viral Video) பரவி வருகிறது. இந்த வேடிக்கையான வீடியோவுக்கு 5.9 மில்லியனுக்கும் அதிகமான லைக்குகள் கிடைத்துள்ளன. இது 130 மில்லியனுக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டது. தொடர்ந்து இந்த வீடியோ குறித்து மக்கள் பேசி வருகின்றனர்.

இதைப் பார்த்த ஒரு பயனர், “அன்பைக் காட்ட இது ஒரு சிறந்த வழியாகும்.” என்று எழுதியுள்ளார். மறுபுறம், மற்றொரு பயனர், “வீடியோவைப் பார்த்து என்னால் சிரிப்பை நிறுத்த முடியவில்லை” என்று கருத்து தெரிவித்துள்ளார்.

யூடியூப்பில் 6 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்களைக் கொண்டுள்ள அன்வர் ஜிபாவி ஒரு பாலஸ்தீனிய-அமெரிக்க நகைச்சுவை நடிகர் ஆவார். அவரது வீடியோக்கள் ஒவ்வொரு நாளும் வைரலாகி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெறுகின்றன.

ALSO READ:ஓடும் ரயிலிலிருந்து விழுந்த பெண் பிழைத்தாரா? வைரலாகும் திக் திக் வீடியோ 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

More Stories

Trending News