நீர்யானை கூட்டத்தை தெறிக்க விட்ட ஒற்றை யானை! வைரலாகும் வீடியோ!

Viral Video of Elephant Vs Hippopotamus: சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், யானை ஒன்று,  நீர்யானை கூட்டத்தை சமாளித்து ஓட்டும் காட்சி வைரலாகி வருகிறது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 24, 2023, 03:02 PM IST
  • காடுகளில் வாழும் யானைகள் மிகவும் வலிமையான மற்றும் புத்திசாலித்தனமான விலங்குகள்.
  • யானைகள் தங்கள் காலடியில் போட்டு மிதித்து எந்த விலங்குகளையும் கொல்லும் திறன் கொண்டவை.
  • யானையும் நீர்யானையும் சந்தித்து கொண்டால் அங்கே ஒரு போர்களம் உருவாவது நிச்சயம் எனலாம்.
நீர்யானை கூட்டத்தை தெறிக்க விட்ட ஒற்றை யானை! வைரலாகும் வீடியோ! title=

இணையத்தில் தினமும் எண்ணிலடங்கா விடியோக்கள் பகிரப்பட்டாலும், சில வீடியோக்கள் தான் ரசிகர்களின் பேராதரவைப் பெறுகின்றன. அதிலும் சுவாரஸ்யமான காட்டு விலங்குகள் வீடியோக்கள் என்றால் கேட்கவே வேண்டாம். வன வாழ்க்கையில் அதிர்ச்சி சம்பவங்களையும், வினோதமான தருணங்களையும் விளக்கும் வீடியோக்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அந்த வகையில் தற்போது, ஒன்றை யானை ஒன்று நீர்யானை கூட்டங்களை எதிர் கொள்ளும் வீடியோ இணையவாசிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.    

 காடுகளில் வாழும் யானைகள் மிகவும் வலிமையான மற்றும் புத்திசாலித்தனமான விலங்குகள் என்பதும் மாற்று கருத்துஏதும் இல்லை. ஆனால் அவை கோபமடைந்தால், அவை காட்டில் ஒரு பேரழிவை உண்டாக்கி விடும். யானைகள் தங்கள் காலடியில் போட்டு மிதித்து எந்த விலங்குகளையும் கொல்லும் திறன் கொண்டவை. ஆனால் நீர்யானைகள்களும் யானைகளைப் போலவே சக்திவாய்ந்ததாகவும் ஆபத்தானதாகவும் கருதப்படுகின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையில் யானையும் நீர்யானையும் சந்தித்து கொண்டால் அங்கே ஒரு போர்களம் உருவாவது நிச்சயம் எனலாம்.

மேலும் படிக்க | Viral Video: மலை பாம்பை கபளீகரம் செய்யும் ராட்சஸ பாம்பு... மனம் பதற வைக்கும் வீடியோ!

இதற்கிடையில், ஒரு ஆச்சரியமான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.அதில் ஒரு யானை தனியாக ஒ நீர்யானை கூட்டத்தை தெறிக்க விடுவதைக் காணலாம். யானை நீர்யானைகளுக்கு இடையில் தைரியமாக நீந்திச் செல்வதோடு மட்டுமல்லாமல், அவற்றை விலகி ஓட செய்கிறது.  இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் waowafrica என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது.

வைரலாகும் வீடியோவை இங்கே காணலாம்:

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Waow Africa (@waowafrica)

சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், யானை ஒன்று,  நீர்யானை கூட்டத்தை சமாளித்து ஓட்டும் காட்சி வைரலாகி வருகிறது. யானை நீர்யானைகளுக்கு இடையில் மட்டும் தைரியமாக செல்வதோடு மட்டுமல்லாமல், அவற்றை அங்கிருந்து விலகி ஓடச் செய்கிறது. யானைகள் பொதுவாக வலிமை மிக்கவை. அதுவும் கூட்டமாக வரும் யானைகளை விட ஒற்றை யானை மிகவும் ஆபத்தானது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | Viral Video: மயக்கும் நடனத்தால் காதலிக்கு தூது விடும் காட்டுக் கோழி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News