குஷ்பு 2.0: அன்று கொண்டையில் தாழம்பு, இன்று கொண்டையில் பாம்பு!!

சமீப காலங்களில் பாம்புகளின் வீடியோக்கள் இணையத்தில் பட்டையைக் கிளப்பி வருகின்றன. தற்போது ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 24, 2021, 03:16 PM IST
குஷ்பு 2.0: அன்று கொண்டையில் தாழம்பு, இன்று கொண்டையில் பாம்பு!! title=

Viral Video: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 

சமூக ஊடகங்களில் (Social Media) பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் (Viral Video) ஆகின்றன.  சமீப காலங்களில் பாம்புகளின் வீடியோக்கள் இணையத்தில் பட்டையைக் கிளப்பி வருகின்றன. தற்போது ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

பெண் ஒருவர் தலையில் பாம்புடன் மாலில் சுற்றித் திரியும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. பாம்பை ஹெட் பேண்டாக சுற்றிக்கொண்டு மாலில் உலா வரும் அந்த பெண்ணின் தலையை ஒருவர் கூட கவனிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

‘snake._.world' என்ற பயனரால் இன்ஸ்டாகிராமில் இந்த வீடியோ பதிவேற்றப்பட்டது. இந்த வீடியோவுக்கு இதுவரை 15,400 வியூஸ்களும் 750 லைக்குகளும் கிடைத்துள்ளன. 

ALSO READ |  காத்திருந்த புறா, கிஸ் கொடுத்த பூனை: பூரிக்கும் நெட்டிசன்கள், வைரலான வீடியோ

இந்த வித்தியாசமான வீடியோவில் (Viral Video), தலையில் ஒரு சிறிய பாம்புடன் ஒரு பெண் சர்வ சாதாரணமாக ஒரு வணிக வளாகத்திற்குள் நுழைவதைக் காண முடிகின்றது. தனது தலைமுடியை ஒரு கொண்டயாக போட்டு அந்த கொண்டைக்கு ஒரு பேண்டைப் போல, அதில் ஒரு பாம்பையும் சுற்றி வைத்துள்ளார். 

அந்த பெண்ணை ஒருவர் படமெடுக்க அவர் மாலில் ஒய்யாரமாக நடமாடத் தொடங்குகிறார். அந்த பெண் தனது கொண்டையில் சுற்றியிருப்பது ஒரு உண்மையான பாம்பு என யாரும் அடையாளம் காணவில்லை. பாம்பின் தலைப்பகுதி நன்றாகத் தெரிந்தாலும், யாரும் அதை கவனிக்கவில்லை. 

வீடியோவில், ‘யாருக்கும் தெரியப்போவதில்லை’ என ஒருவர் கூறுவதையும் கேட்க முடிகிறது. அவர் கூறுவது போலவே பெண்ணின் கொண்டையில் ஒய்யாரமாய் சுற்றியிருக்கும் பாம்பை யாவும் கண்டுகொள்ளவில்லை.

பாம்பால் (Snake) ஆன 'அசாதாரண' ஹேர்பேண்டை யாரும் கவனிக்காத இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பெண்ணின் தலையில் பாம்பு நன்றாக தெரிந்தும் அதை யாரும் கண்டுகொள்ளவில்லை என்பது பார்ப்பதற்கு ஆச்சரியமாக உள்ளது. 

இந்த வீடியோவுக்கு பல வித கமெண்டுகள் வந்து குவிந்த வண்ணம் உள்ளன. ஒரு பயனர் நகைச்சுவையாக, "வழக்கமான ரப்பர் பேண்டுகளை விட, இந்த பாம்பு இந்த வேலையை நன்றாக செய்கிறது” என எழுதியுள்ளார். 

“யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை என்பது மிக ஆச்சரியமாக உள்ளது” என ஒரு பயனர் ஆச்சரியப்பட, மற்றொருவரோ, “ நான் அங்கிருந்தால் இதை கண்டுபிடித்திருப்பேன். என்னால், எவ்வளவு தொலைவிலிருந்தும் பாம்புகளை கண்டுபிடிக்க முடியும்” என தன் புகழ் பாடியுள்ளார். 

பலரை ஆச்சரியப்படுத்தியிருக்கும் அந்த வினோத வீடியோவை இங்கே காணலாம்: 

ALSO READ | KFC உணவில் கோழியின் முழு தலை! நான் தலைக்கறி ஆர்டர் பண்ணலையே!! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News