'100% காதல்' திரைப்படத்தின் 'ஒரு வானம்' பாடல் வெளியானது!

GV பிரகாஷ், ஷாலினி பாண்டே நடிப்பில் உருவாகியுள்ள '100% காதல்' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'ஒரு வானம்' படாலின் லிரிக்கல் வீடியோவினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 4, 2018, 06:15 PM IST
'100% காதல்' திரைப்படத்தின் 'ஒரு வானம்' பாடல் வெளியானது! title=

GV பிரகாஷ், ஷாலினி பாண்டே நடிப்பில் உருவாகியுள்ள '100% காதல்' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'ஒரு வானம்' படாலின் லிரிக்கல் வீடியோவினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்!

தெலுங்கில் தமன்னா, நாக சைதன்யா நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்ற திரைப்படம் '100% லவ்'. இத்திரைப்படம் தெலுங்கு திரையுலகில் வசூல் சாதனை படைத்தது.

அத்தை மகனுக்கும், மாமன் மகளுக்கும் ஏற்படும் காதலை மையமாக கொண்டு இத்திரைப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. தெலுங்கில் நல்ல வரவேற்பினை பெற்ற இத்திரைப்படம் தற்போது தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது.

இப்படத்தில் நடிகர் GV பிரகாஷ், அர்ஜூன் ரெட்டி புகழ் சாலினி பாண்டே முன்னணி பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் தெலுங்கு வெர்சனில் இயக்குநராக பணியாற்றிய சுகுமார், தமிழ் ரீமேக்கின் தயாரிப்பாளர் பொருப்பை ஏற்றுள்ளார். இவர்களுடன் நாசர், தம்பி ராமைய்யா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். 

படத்தின் வேலை தற்போது முடிவடைந்துள்ள நிலையில் இத்திரைப்படத்தின் ப்ரோமஷன் வீடியோக்களை படக்குழுவினர் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த செப்டம்பர் 10-ஆம் நாள் இப்படத்தின் முதல் டீஸர் வெளியானது. இந்நிலையில் தற்போது இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு வானம் என்னும் பாடலின் லிரிக்கல் வீடியோவினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்!

Trending News