வாசம் மூக்கைத் துளைக்குது! அடங்க மறுக்கும் நாய்க்குட்டியின் அடக்க முடியாத துள்ளல்

Funny Animal Video: பசியில்லாமல் இருந்தாலும், இந்த நாய்க்குட்டி செய்யும் அலப்பறை உங்கள் பசியை தூண்டிவிடும்.  விலங்குகளின் புத்திசாலித்தனம் கியூட்டாக வெளிப்படும் தருணம்  

Last Updated : Aug 29, 2023, 06:11 PM IST
  • பசியைத் தூண்டும் உணவின் மணம்
  • சீக்கிரமா சமைக்க மாட்டீங்களா?
  • நாய்க்குட்டியின் துள்ளல் வீடியோ வைரல்
வாசம் மூக்கைத் துளைக்குது! அடங்க மறுக்கும் நாய்க்குட்டியின் அடக்க முடியாத துள்ளல் title=

வைரல் வீடியோ: மனதை மிகவும் லேசாக்கி, அன்றாட நடைமுறையில் இருந்து சற்று ஆசுவாசம் அடைய, இணையத்தில் வைரலாகும் வீடியோக்கள் உதவுகின்றன. இணையத்தில் தினமும் கணக்கில்லாத அளவு விடியோக்கள் பகிரப்பட்டாலும், சில வீடியோக்கள் தான் அனைவரின் மனதையும் கொள்ளைக் கொள்கின்றன. இணைய உலகில் பகிரப்படும் சில வீடியோக்கள் நம் டென்ஷனை போக்கும் மருந்துகளாக இருக்கின்றன என்றால், பல டென்ஷனை அதிகப்படுத்துபவை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கின்றன. இங்கு வெளியாகும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. 

கூர்முனை கொண்ட கத்தியை ஆக்கவும் பயன்படுத்தலாம், அழிக்கவும் பயன்படுத்தலாம் என்பது போல, கைக்குள் அடங்கும் நவீன தொழில்நுட்பத்தை நல்லதிற்காக பயன்படுத்துவது நல்லது. செல்ல பிராணிகளுக்கு இடையிலான நட்பை அல்லது காதலை வெளிப்படுத்தும் தருணங்கள் பார்ப்பதற்கு மகிழ்ச்சியைக் கொடுப்பவை.

மேலும் படிக்க | சின்னப்புள்ளையா இருக்கும்போது இப்படித்தானே விளையாடினீங்க? ஞாபகம் வருதே.... வீடியோ வைரல்

தற்போது ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகி வரும் வீடியோவில், வீட்டில் இருக்கும் செல்ல நாய்க்குட்டியின் குறும்பும், ஜாலியான விளையாட்டும், உற்சாகத்துள்ளலும் வைரலாகி வருகிறது.

அப்படி என்ன உற்சாகம் என்று தெரிந்துக் கொள்ள இந்த வீடியோவைப் பாருங்கள்...

சமையல் மணம் மூக்கைத் துளைக்க, எப்போ சாப்பாடு போடுவீங்க? என்று கேட்பது போல், துள்ளி குதிக்கும் நாய்க்குட்டியில் ஆவல் அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கிறது. உற்சாகத்தில் தாவிக் குதிக்கும் நாய், அடுப்பில் சமைத்துக் கொண்டிருப்பதை எட்டி எட்டி பார்க்கும் காட்சி சிரிப்பூட்டுகிறது.

வீட்டில் குழந்தையை போல வளர்க்கப்படும் செல்லப்பிராணிகள், மனதிற்கு மகிழ்ச்சியைக் கொடுக்கின்றன என்பதை இந்த வீடியோ உணர்த்துகிறது. பேசாம போய் உக்காரு, என்று அதட்டல் போட்டதும், பேசாமல் போய் உட்காரும் நாய், சில நிமிடங்களில் மீண்டும் வந்து, காலைச் சுற்றுவது பார்க்கவே ஆசையாக இருக்கிறது.

சமூக ஊடகங்களில் ரசிக்கப்படும் இந்த வீடியோவை பலரும் ரசித்து பார்க்கின்றனர், லைக்குகளும் அள்ளுகின்றன. குடும்ப உறுப்பினராகவே இருந்தாலும், நாய்க்குட்டிகள் வைக்கும் பாசத்திற்கு முன் எதுவும் செல்லாது என்பதை உணர்த்தும் நெகிழ்ச்சி வீடியோ இது.   

அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கலில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அதில் இந்த வீடியோ லேட்டஸ்ட், முதலில் வீடியோவைப் பார்த்து, பாசம் வச்சதால பைத்தியம் ஆனேனே என்று புலம்பும் நாய்க்குட்டியைப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்தாலும், அதன் பாசப் போராட்டம் வியக்க வைக்கிறது.

மேலும் படிக்க | கியூட்டா ஒரு கேட்வாக்: அசத்தும் நாய் மாடல்கள்.. வியக்கும் நெட்டிசன்ஸ்!! வைரல் வீடியோ

வீடியோவில், நாய்க்குட்டியிடம் பேசிக் கொண்டே சமைக்கும் எஜமானியும், அவரின் சமையல் மணத்தை வாசம் பிடித்து, ஆவலைக் கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கும் செல்லக்குட்டியின் எக்சைட்மெண்ட் ரசிக்கத் தூண்டுகிறது.  

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிக்க | Viral Video: முதல் முத்தம் கொடுத்த போதை... தலைகால் புரியாமல் சுற்றும் நாய்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News