மனித உருவத்தில் பன்றி குட்டி ஒன்று பிறந்துள்ளதாக சமீப நாட்களாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றது!
இந்த செய்தி உன்மை தானா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். காரணம் இந்த செய்தி குறித்து வலுதளங்களில் பகிரப்பட்டு வரும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இந்த செய்தியினை உன்மை எனவே நம்பவைத்துவிட்டது.
இந்த புகைப்படங்களில் இருக்கும் குழந்தையின் உடல் அசைவும் இந்த செய்தியினை உன்மை எனவே தெரிவித்தது. இந்தியா மட்டுமல்லாமல் உலக அளவில் பிரபலமான இந்த செய்தியில் வரும் குழந்தை உன்மை தான் எனவும் பிரபல ஆங்கில பத்திரிக்கை செய்தியினை வெளியிட்டது.
A pig delivered a baby with mixed features of man and pig yesterday at siddipet district.. pic.twitter.com/xtnv80PygE
— Akhil gaddam (@Akhilgaddam8) July 27, 2018
Nice there’s a baby/pig/bat/gollum on my tl pic.twitter.com/RaUF7uRwoU
—  (@_Hixs_) July 28, 2018
A pig in kakamega has delivered a baby boy.When will jesus come ? pic.twitter.com/cVOUo7yWvI
— Wenisa (@WenisaKenya) July 26, 2018
இந்நிலையில் தற்போது இந்த செய்தி பொய் எனவும், இந்த புகைப்படங்களில் இருக்கும் குழந்தை இத்தாலி நாட்டின் கலைஞர் கைவண்ணத்தில் உருவாக்கப்பட்ட பொம்மை எனவும் தெரியவந்துள்ளது.
இத்தாலி நாட்டினை சேர்ந்தவர் லைரா மகானுச்சோ. இவர் சிலிக்கான் ரப்பர் கொண்டு உயிரினங்கள் போன்ற பொம்பைமகளை வடிவமைத்து வருகின்றார். இந்நிலையில் இந்த பன்றி குழந்தையும் இவரது வடிவமைப்பில் உருவானது தான் என்பதை உறுதிசெய்யும் வகையில் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதுகுறித்த பதிவிட்டுள்ளார்.