Vatican: பிரேசில் பிகினி மாடலின் புகைப்படத்தை போப் பிரான்சிஸின் இன்ஸ்டாகிராம் கணக்கில் லைக் செய்த விவகாரத்தில், அது எப்படி நடந்தது என்று வத்திக்கான் கேள்வி எழுப்பியுள்ளது. இந்த விஷயத்தில் வத்திக்கான் இன்ஸ்டாகிராமிடம் விளக்கம் கோரியுள்ளது.
ஒரு செய்தி நிறுவனத்தின் அறிக்கையின்படி, போப் பிரான்சிஸின் இன்ஸ்டாகிராம் கணக்கில் இருந்து பிரேசிலிய பிகினி மாடலின் புகைப்படத்திற்கு எவ்வாறு லைக் சென்றது என்பது குறித்து வத்திக்கானில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
உண்மையில் போப் பிரான்சிஸ் பெயரில் இருக்கும் கணக்கை அவர் நேரடியாக கையாளுவதில்லை, அவரது சமூக ஊடகங்களை பார்த்துக் கொள்வதற்காக ஒரு குழு இருக்கிறது, அதுதான் போப் பிரான்சிஸின் இன்ஸ்டாகிராம் கணக்கைக் கையாளுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
போப் பிரான்சிஸின் இன்ஸ்டாகிராம் கணக்கில் இருந்து எப்போது லைக் செய்யப்பட்டது என்று இதுவரை தெரியவில்லை. நவம்பர் 13 ஆம் தேதி, பிரேசிலிய பிகினி மாடலின் புகைப்படம் இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டது. இந்த புகைப்படத்திற்கு, Pope Francis-இன் இன்ஸ்ட்ராகாம் கணக்கில் இருந்து லைக் செய்யப்பட்டுள்ளது.
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR