முயல் - ஆமை ஓட்டப்பந்தயம்: கதையல்ல நிஜம்... ஜெயிச்சது யார் தெரியுமா? வைரலாகும் வீடியோ

Rabbit Tortoise Race: கதைகளிலே கேட்ட முயல் - ஆமை ஓட்டபந்தயம் கதையை நிஜத்தில் ஒருவர் செய்திகாட்டியுள்ளார். இதன் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Written by - Sudharsan G | Last Updated : Oct 4, 2024, 08:50 PM IST
  • இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டுள்ளது.
  • இந்த வீடியோவில் 1.50 கோடி வியூஸ் வந்துள்ளது.
  • இதுவரை 6 லட்சத்திற்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர்.
முயல் - ஆமை ஓட்டப்பந்தயம்: கதையல்ல நிஜம்... ஜெயிச்சது யார் தெரியுமா? வைரலாகும் வீடியோ title=

Rabbit Tortoise Running Race Viral Video: சிறு வயதில் நாம் அனைவரும் கதைக்கேட்டுதான் வளர்ந்திருப்போம். தாத்தா, பாட்டியிடம் புராணக்கதை; அப்பா - அம்மாவிடம் ஊர்க்கதைகள் என பல்வேறு கதைகளை பலவிதங்களில் கேட்டிருப்போம். ஒரு ஊர்ல, ஒரு ராஜா இருந்தாராம் என ஆரம்பிக்கும் எண்ணற்ற கதைகள் கேட்டிருப்பிருப்போம், வாசித்திருப்போம். பாட்டி வடை சுட்ட கதை எந்தளவிற்கு பிரபலமோ அந்தளவிற்கு முயல் - ஆமையின் ஓட்டப்பந்தயம் கதையும் அனைவருக்குமே தெரிந்ததுதான்.  

முயல் - ஆமை கதையை நிதானமாக இருக்க வேண்டும் என்பதற்கும் அதே நேரத்தில் விவேகமாகவும் இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக சொல்லப்படும் ஒன்றாகும். ஓட்டப்பந்தயம் ஒன்றை முயலுக்கும், ஆமைக்கும் இடையில் வைத்தால் நிச்சயம் முயல்தான் ஜெயிக்கும் என அனைவருக்குமே தெரிந்ததுதான். ஆனால் வேகமாக ஓடக்கூடிய முயல், அதீத நம்பிக்கையில் பாதி வழியிலேயே தூங்கிவிடும். ஆனால், நிதானமாகவும், விவேகமாகவும் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருந்த ஆமை வெற்றி பெற்றுவிடும். இது உண்மையாகவே நடந்திருக்கிறதா இல்லையா என்பது யாருக்குமே தெரியாது. 

முயல் - ஆமை ரேஸ்: வைரல் வீடியோ

நன்மொழிகளை வலியுறுத்த பெரியவர்களால் கற்பனையாக சொல்லப்படும் கதைகளில் ஒன்றாகவே இது பார்க்கப்படுகிறது. முயல் எப்படி அப்படி நினைத்து தூங்கும், ஆமை அவ்வளவு மெதுவாக சென்று எப்படி வெற்றி பெற முடியும் என்பது லாஜிக்கலாக அனைவரிடமும் இருக்கும் கேள்விதான். இருந்தாலும் அது உண்மையா, பொய்யா என்பதை அறிய ஒருவர் உண்மையாகவே முயலையும், ஆமையும் ஒரு இடத்திற்கு கொண்டு வந்து ஓட்டப்பந்தயம் நடத்தி உள்ளனர். இந்த ரேஸின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க | இப்படி செங்குத்தான மலையில் ஏற முடியுமா? டொயோட்டா லாண்ட் க்ரூசியர் பீஸ்ட் கார்!

அந்த வீடியோவிலும் முயலை ஆமை தோற்கடித்துள்ளது. ஆம், நீங்கள் கதைகளில் கேட்டது உண்மைதான். முயல் ஆமையை விட அதிவேகமாக ஓடும் என்றாலும் இந்த வீடியோவில் அதே ஓடவில்லை. ஆங்காங்கே நடந்துசென்று கவனத்தை வேறு பக்கம் செலுத்தியது. ஆனால், ஆமையா ரேஸ் தொடங்கியதில் இருந்து நிதானமாக ஓடத்தொடங்கி வெற்றி இலக்கையும் அடைந்துவிட்டது. இந்த வீடியோ எங்கு, யாரால் எடுக்கப்பட்டது என தெரியவில்லை. இருப்பினும், இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டு வைரலாகி உள்ளது. 

1.50 கோடி வியூஸ்

led_display_factory என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ளது. இந்த பக்கத்தில் இதுவரை மொத்தம் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பதிவுகள் பதிவுடப்பட்டுள்ளன. சுமார் 6 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த பக்கத்தை பின்பற்றி வருகின்றனர். அந்த வகையில், இந்த வீடியோவும் இந்த பக்கத்தில் கடந்த 5 நாள்களுக்கு முன் பதிவிடப்பட்டுள்ளது. இதுவரை 1.50 கோடி வியூஸ் இன்ஸ்டாகிராமில் மட்டும் வந்துள்ளது. 6 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த வீடியோவில் லைக் செய்துள்ளனர். 60 ஆயிரத்திற்கும் மேலானோர் கமெண்ட் செய்துள்ளனர்.  

கதைப்படி முயலும் நடித்துள்ளது பார்க்கவே அருமையாக இருக்கிறது என பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். சிறுவயதில் நாம் கேட்டு வளர்ந்த கதை உண்மைதான் போல என பலரும் கமெண்ட் செய்துள்ளனர். அதுமட்டுமின்றி, நிதானமாகவும் விவேகமாகவும் செயல்பட்டால் வெற்றி நிச்சயம் என்பதை இந்த வீடியோ மீண்டும் உறுதி செய்கிறது என பலரும் கமெண்ட் செய்துள்ளனர். 

மேலும் படிக்க | பட்டு எப்படி உருவாகிறது தெரியுமா? இந்த வீடியோவை பாருங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News