டெஸ்ட் போட்டியின் போது தூங்கிய தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி

மூன்றாவது டெஸ்டில் தென்னாப்பிரிக்காவை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 202 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா 3-0 என்ற கணக்கில் தனது வெற்றியை பதிவு செய்தது. 

Updated: Oct 23, 2019, 12:00 PM IST
டெஸ்ட் போட்டியின் போது தூங்கிய தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி
Image Credits: Twitter

மூன்றாவது டெஸ்டில் தென்னாப்பிரிக்காவை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 202 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா 3-0 என்ற கணக்கில் தனது வெற்றியை பதிவு செய்தது. 

ஆனால், போட்டியினை போக்கை காட்டிலும் சமூக ஊடகங்களில் ரசிகர்களின் கவனத்தைத் திருடிய படம், தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆட்டத்தின் போது தூங்கிய புகைப்படம் தான்.

போட்டியின் போது டிரஸ்ஸிங் ரூமில் ரவி சாஸ்திரி தூங்கிக்கொண்டிருக்கும் இந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் பல எதிர்வினைகளை பெற்றுள்ளது., இறுதியில் இது பல நகைச்சுவைகளுக்கும் உட்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டரில் இந்த புகைப்படத்தைப் பகிர்ந்த ரசிகர் ஒருவர் சாஸ்திரியை குறித்து குறிப்பிடுகையில்., 'ஸ்லீப்பிங் கோச்' என்று அழைத்துள்ளார்.

மற்றொரு ரசிகர் தலைமை பயிற்சியாளர் குறித்து பதிவிடுகையில்., "ரவி சாஸ்திரி முழு உலகிலும் மிகச் சிறந்த வேலையைக் கொண்டுள்ளார். விருப்பப்படி குடிப்பார், அலுவலக நேரத்தில் தூங்குவார், கோடியில் சம்பளம் பெறுவார்..." என விமர்சித்துள்ளார்.

"ரவி சாஸ்திரி தூங்குவதற்கு ஆண்டுக்கு 10 கோடியா?" என்று மற்றொரு நபர் ட்விட்டரில் படத்தைப் பகிர்ந்துக்கொண்டுள்ளார்.

மற்றொரு ரசிகர் சாஸ்திரியை, ராமாயணத்தின் அரக்கனும், ராவணனின் தம்பியுமான கும்பகர்ணனுடன் ஒப்பிட்டுள்ளார். அதாவது, ஆறு மாதங்கள் தூங்குவதற்காகவும், ஆறு மாதம் உண்பதற்காகவும் செலவழித்தவர் என அறியப்பட்ட கும்பகர்ணனை போன்று ரவி சாஸ்திரி தனது வாழ்நாளை கழித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

"ரவி சாஸ்திரி கும்பகரனின் மறுபிறவி என்பதற்கான சான்றுகள் - 1. அரை நேரம் தூங்குகிறது 2. எழுந்ததும், மது மற்றும் பானங்களை உட்கொள்வது 3. முழுமையாக வளர்ந்த தொப்பை உள்ளது 4. எப்போதும் களத்தில் போராட தயாராக இருப்பது" என்று மற்றொரு நபர் குறிப்பிட்டுள்ளார். ரவி சாஸ்திரி குறித்த இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.