Google Trends: சிங்கிளா இருந்தாலும் சிரிச்சிகிட்டே விளையாடலாம்! பறவை கற்றுக் கொடுக்கும் சீசா பாடம்!!

வாழ்க்கையில் தனிமையில் இருப்பவர்கள் சோகமாக இருக்கக்கூடாது என்பதை உணர்த்தும் பறவையின் வீடியோவைப் பார்த்தால் எல்லா சோகமும் மறந்துவிடும்  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 2, 2022, 01:08 PM IST
  • சிங்கிளா இருந்தாலும் சிரிச்சிகிட்டே விளையாடலாம்
  • பறவை கற்றுக் கொடுக்கும் பாடம்
  • வைரல் வீடியோ
Google Trends: சிங்கிளா இருந்தாலும் சிரிச்சிகிட்டே விளையாடலாம்! பறவை கற்றுக் கொடுக்கும் சீசா பாடம்!! title=

விலங்குகள் மற்றும் பறவைகள் தொடர்பான பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. இந்த வீடியோக்கள் பயனர்களால் மிகவும் விரும்பப்படுகின்றன. பல வீடியோக்கள் நம்மை ஆச்சரியப்படுத்துகின்றன. அப்படி ஒரு காணொளி தான் இது.

தனியாக இருக்கும் ஒரு பறவை சீசாவில் வேடிக்கையாக விளையாடும் வீடியோ (Bird Video) சமூக ஊடகங்களில் வைரலாகிறது. இந்த வீடியோவை அனைவரும் அதிலும் குறிப்பாக வாழ்க்கையில் தனியாக இருப்பவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டும். காணொளியில் காணப்படும் பறவை தனிமையில் இருப்பவர்களுக்கு பெரிய பாடம் புகட்டுகிறது.

வாழ்க்கையில் தனிமையில் இருப்பவர்கள் சோகமாக இருக்கக்கூடாது என்பதை உணர்த்தும் பறவையின் வீடியோவைப் பார்த்தால் எல்லா சோகமும் மறந்துவிடும்.

ALSO READ | காகத்திற்கே சால்வை போர்த்திய மனிதாபிமான வீடியோ

சீசாவில் விளையாடும் பறவை  
வைரலான வீடியோவில், சீசாவில் ஒரு பறவை வேடிக்கையாக விளையாடுகிறது. அதிலும், தனியாக இருந்தாலும், அதை பொருட்படுத்தாமல், தன் இஷ்டத்திற்கு விளையாடுவது ரசிக்கத் தூண்டுகிறது.

இந்த காணொளியை பார்த்தால் முதலில் நமது குழந்தைப்பருவம் தான் நினைவுக்கு வரும். இதற்குப் பிறகு, வாழ்க்கையில் எவ்வளவு தனிமையாக இருந்தாலும், ஒருபோதும் சோகமாக இருக்கக்கூடாது என்பது ஒரு பறவைக்கு கூட தெரியும் என்ற நினைப்பு மனதில் உற்சாகத்தைத் தரும்.  

இந்த அழகான வீடியோ Buitengebieden என்ற ட்விட்டர் கணக்கில் இருந்து பகிரப்பட்டுள்ளது. சீசாவில் விளையாடுவதற்கு இரண்டு பேர் தேவை என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் இந்த பறவை தனியாக ஊஞ்சலாடுகிறது. வீடியோவைப் பார்த்தால் பறவைக்கு துணை தேவை என்று தோன்றவில்லை என்று தோன்றுகிறது.  

இந்த வீடியோ (Bird Video) சமூக வலைதளங்களில் பலரால் விரும்பப்பட்டு வருகிறது. பல பயனர்கள் வீடியோவில் தங்கள் கருத்தை பதிவு செய்துள்ளனர். வீடியோவைப் பார்த்த ஒரு பயனர், 'நான் எனது குழந்தைப் பருவத்தை இழக்கிறேன்' என்று கருத்து தெரிவித்துள்ளார். 

மற்றொரு பயனர், 'நான் இந்தப் பறவையை விரும்புகிறேன்' என்று கருத்து தெரிவித்துள்ளார். இதுவரை இந்த வீடியோவை 3 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடியோவை லைக் செய்துள்ளனர்.

ALSO READ | கல்யாண பொண்ணா இருந்தா என்ன? நமக்கு சாப்பாடுதான் முக்கியம்!! வைரல் வீடியோ 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News