என்ன கொடுமடா இது..முதலிரவு வீடியோ ஷேர் செய்த ஜோடி..வைரல் வீடியோ

First Night Viral Video: இந்த ஜோடி அனைத்து வரம்புகளையும் தாண்டி, தங்கள் பிஸ்ட நைட் வீடியோவை எடுத்து பதிவு செய்தனர். ஆச்சரியம் என்னவென்றால், இருவரும் இந்த வீடியோவை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்ள துளியும் தயங்கவில்லை என்பதுதான். தயங்கவில்லை.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 2, 2023, 02:20 PM IST
  • இந்திய திருமணங்களில் பல விதமான சடங்குகள் நடக்கின்றன.
  • திருமணம் தொடர்பான வீடியோக்களில் பல்வேறு வகையான காட்சிகள் காணப்படுகின்றன.
  • தற்போது முதலிரவு வீடியோ வைரலாகி வருகின்றது.
என்ன கொடுமடா இது..முதலிரவு வீடியோ ஷேர் செய்த ஜோடி..வைரல் வீடியோ

முதலிரவு வைரல் வீடியோ: முதலிரவு என்பது ஒவ்வொரு நபரின் வாழ்க்கையிலும் மறக்க முடியாத தருணமாகும். இந்தியப் பண்பாட்டில் இல்லறவாழ்வைத் தொடங்கும் புதுமணத் தம்பதியர், திருமணத்தன்று வரும் இரவை தனியறையில் கழிப்பர். அந்த இரவு அவர்களின் முதலிரவு என அழைக்கப்படும். புதுமணத் தம்பதியரைத் தனியறைக்கு அனுப்பும்முன் சில சடங்குகள் இந்தியாவில் நடத்தப்படும். இச்சடங்குகள் வெவ்வேறு பகுதிகளில் வேறுபடுகின்றன. இந்தச் சடங்கைத்தொடரும் இரவு 'சாந்தி முகூர்த்தம்' என்றும் தமிழகத்தில் அழைக்கப்படுகிறது. ஆனால் இன்றைய இளம் தலைமுறையினர் வித்தியாசமான போக்கைக் கடைப்பிடிக்கின்றனர். இணையத்தில் வைரலாவதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட தந்திரங்களை மக்கள் பின்பற்றுகின்றனர். இன்றைய வைரல் வீடியோவிலும் அப்படி ஒன்று தான் நடந்துள்ளது.

வெளியாகியுள்ள வீடியோவில், புதுமணத் தம்பதிகள் தங்கள் முதலிரவு வீடியோவை மக்களுடன் பகிர்ந்துள்ளனர். இந்த வீடியோ வெளியாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது, மேலும் மக்களும் இந்த வீடியோவுக்கு லைக் மற்றும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். பொதுவாக திருமணத்தில் தாலி கட்டுவது, ஊஞ்சல், மாலைமாத்துதல், நலங்கு போன்ற நிகழ்வுகள் வீடியோவாக படம் பிடித்திருப்பதை நாம் கண்டுள்ளோம். ஆனால் இங்கு சற்று வித்தியாசமாக மணமக்கள் தங்களின் முதலிரவு வீடியோவை பகிர்ந்துள்ளனர். மேலும் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

மேலும் படிக்க | Viral Video: நீயா... நானா... ஒரு கை பார்த்துடுவோம்! சண்டையில் இறங்கிய யானைகள்!

இதில் நிம்மதியான விஷயம் என்னவென்றால் இந்த வீடியோ உங்களை கட்டாயம் சங்கடப்படுத்தாது என்பது தான். இணையத்தில் வைரலாகி வரும் வீடியோவில், முதலிரவுக்குப் பிறகு மணமகன் மற்றும் மணப்பெண் என்ன செய்கிறார்கள் என்று காட்டப்பட்டுள்ளது. முதலிரவு பற்றி பலருக்கு பலவிதமான எண்ணங்கள் இருக்கும் ஆனால் இந்த வீடியோவை பார்க்கும் போது உங்களால் சிரிப்பை அடக்கவே முடியாது.

இந்த முதலிரவு வீடியோவில், திருமண சடங்குகள் அனைத்தையும் செய்துவிட்டு, சோர்வடைந்த மணமகனும், மணமகளும் தங்கள் அறைக்கு செல்வதையும், மணமகள் தனது போனை எடுத்து வைப்பதையும் காணலாம். அறையின் அலங்காரம் முதலியவற்றை கண்ணாடி முன் முதலில் அவர் காட்டுகிறார். அழகாக அலங்கரிக்கப்பட்ட அறையின் ஒவ்வொரு காட்சியையும் தொலைபேசியில் பதிவு செய்கிறார், அப்போதுதான் மணமகன் மணமகளின் ஆடையை அணிந்த ஒரு பெண்ணைப் போல சிரித்து வெட்கப்படுகிறார். இதற்குப் பிறகு, மணமகள் மெதுவாக நகைகளை கழட்டி அருகில் வைக்கத்தொடங்குகிறார். சோர்வடைந்த மணமகள் படுக்கையில் சென்று அமர்ந்தாள், மணமகன் அவளது தலையிலிருந்து அனைத்து அலங்கக்கார பொருட்களையும் அகற்றத் தொடங்குகிறார். பிறகு என்ன நடக்கிறது என்பதை வீடியோவில் காணுங்கள்.

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

மணமகன் மற்றும் மணமகளின் முதலிரவு தொடர்பான இந்த வீடியோவைப் பகிர்ந்ததில் சிலர் கோபமடைந்துள்ளனர், ஆனால் பலர் வீடியோவை மிகவும் பாராட்டி வருகின்றனர். இந்த வீடியோ lovenibhavai2023 என்ற இன்ஸ்டா கணக்கில் பகிரப்பட்டு ஒரு லட்சத்திற்கும் அதிகமான லைக்களை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | Viral Video: சூரிய நமஸ்காரம் செய்யும் சிறுத்தை! இணைவாசிகளை கவர்ந்த வீடியோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

More Stories

Trending News