கேமராவில் கைதான பாம்புகளின் காதல்: இணையத்தை பற்ற வைத்த வைரல் வீடியோ

Snake Love Video: வீடியோவில் பாம்புகளின் காதல் காணக்கிடைக்கிறது. இதில் காணப்படும் காட்சிகளை நாம் அவ்வளவு எளிதாக பார்த்து விட முடியாது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 27, 2022, 06:27 PM IST
  • வியப்பூட்டும் பாம்புகளின் காதல் வீடியோ.
  • வீடியோவை கவனமாகப் பார்த்தால், இரு பாம்புகளும் இசையின் ட்யூனுக்கு ரியாக்ட் செய்வது தெரிகிறது.
  • நெட்டிசன்கள் இந்த வீடியோவுக்கு பல வித ரியாக்ஷன்களை கொடுத்து இதை அழகான தருணமாக மாற்றியுள்ளனர்.
கேமராவில் கைதான பாம்புகளின் காதல்: இணையத்தை பற்ற வைத்த வைரல் வீடியோ  title=

வைரல் வீடியோ: இணையத்தில் பல விதமான வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம். இவற்றில் நாம் பல அரிய காட்சிகளையும் காண்கிறோம். சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. பாம்புகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

சமூக ஊடகங்களில் தற்போது ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் பாம்புகளின் காதல் காணக்கிடைக்கிறது. இதில் காணப்படும் காட்சிகளை நாம் அவ்வளவு எளிதாக பார்த்து விட முடியாது. இவை மிகவும் அரிதான காட்சிகளாகும். வைரலாகி வரும் இந்த வீடியோவை பார்த்து மக்களும் பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகின்றனர். 

பெரும்பாலும் இணையத்தில், பாம்புகள் பிற விலங்குகளை வேட்டையாடுவதையும், பாம்புகளுக்கு இடையிலான சண்டை காட்சிகளையும் நாம் அதிகம் பார்த்திருக்கிறோம். எனினும், பாம்புகளின் காதல் காட்சிகள் மிக அரிதாகவே காணக்கிடைக்கின்றன. நிஜத்திலும் ஆள் அரவம் இல்லாத இடங்களில்தான் பாம்புகள் தங்கள் சேர்க்கை, அல்லது அன்பின் பரிமாற்றத்தை காண்பிக்கும். தற்போது வெளிவந்துள்ள வீடியோவில், ஒரு ஜோடி பாம்பு ஒன்றன் மீது ஒன்று காதலை பரிமாறிக்கொள்வதை காண முடிகின்றது. 

அப்படி ஒரு காட்சி கேமராவில் சிக்கியுள்ளது. ஆனால், இதில் காணப்படும் காட்சிகள் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும். இந்த வீடியோவை இதுவரை லட்சக்கணக்கானோர் பார்த்துள்ளனர், ஆயிரக்கணக்கானோர் லைக் செய்துள்ளனர்.

மேலும் படிக்க | மூர்க்கமாய் தாக்க வந்த காட்டு யானைக் கூட்டம்; உயிர் தப்பிக்க மரத்தின் மேல் தஞ்சம் அடைந்த நபர்!

காட்டில் அரங்கேறிய பாம்புகளின் காதல் 

சுமார் 6 நிமிடங்கள் கொண்ட வீடியோவில், கிராம மக்கள் காட்டு வழியாக சென்றுகொண்டிருக்கும்போது இரு பாம்புகள் காதல் செய்துகொண்டிருப்பதை காண்கிறார்கள். பாம்புகளின் பாசப்பிணைப்பை பார்த்து கிராமவாசிகள் தாங்கள் வைத்திருக்கும் வாத்தியங்களை  இசைக்கத் தொடங்குகின்றன. பின்னணியில் இசையும், காட்சியில் பாம்புகளின் காதலும் இந்த வீடியோவை மிகவும் வசீகரமானதாக்குகிறது. 

பார்க்க பார்க்க ஆச்சரியத்தை கூட்டும் வீடியோ 

ஒன்றன் மீது ஒன்று காதலை பொழியும் பாம்புகள் பின்னர் செய்யும் ஒரு செயல் காண்பவர்களை வியக்க வைக்கிறது. ஆண் நாகம் சில சமயங்களில் காற்றில் பல அடிகள் மேல் நோக்கி பாய்வதை வீடியோவில் காண முடிகின்றது. அதைப் பார்த்த பெண் நாகமும் அதையே செய்யத் தொடங்குகிறது. இப்படி ஒரு காட்சி பலமுறை காணப்படுகின்றது. வீடியோவை கவனமாகப் பார்த்தால், இரு பாம்புகளும் இசையின் ட்யூனுக்கு ரியாக்ட் செய்வது தெரிகிறது. சில சமயங்களில் இரண்டு பாம்புகளும் அமைதியாவதையும், சில சமயங்களில் திடீரென்று ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொள்வதையும் காண முடிகின்றது. 

வியப்பூட்டும் பாம்புகளின் காதல் வீடியோவை இங்கே காணலாம்

இந்த வீடியோ எப்போது, ​​எங்கிருந்து எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை. Nilaview யூடியூப் சேனலில் இந்த வீடியொ பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. நெட்டிசன்களும் இந்த வீடியோவுக்கு பல வித ரியாக்ஷன்களை கொடுத்து இதை அழகான தருணமாக மாற்றியுள்ளனர்.

மேலும் படிக்க | அட கடவுளே! காதலனை நடுரோட்டில் வெளுத்து வாங்கிய காதலி: வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News