வாடா பாத்துர்லாம் நீயா நானானு, பாம்புக்கு பாடம் கற்பித்த அணில்: வீடியோ வைரல்

தற்போது வெளியாகியுள்ள வீடியோவில் குட்டி அணில் ஒன்று அங்கிருந்த மஞ்சள் நிற நாகப்பாம்பின் வாலை இழுத்து வம்பிழுக்கிறது. இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jan 5, 2023, 10:49 AM IST
  • பாம்பின் வாலை இழுத்து சண்டை இடும் அணில்.
  • கடுப்பான நாகப்பாம்பு.
  • முரட்டு பாம்பின் வைரல் வீடியோ.
வாடா பாத்துர்லாம் நீயா நானானு, பாம்புக்கு பாடம் கற்பித்த அணில்: வீடியோ வைரல் title=

குரங்கு மற்றும் பாம்பின் வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஒரு ஆச்சரியமான உலகமாகும். இங்கே நாம் கற்பனை கூட செய்ய முடியாத பல விஷயங்களை காண்கிறோம். அதன்படி பொதுவாக நாம் இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. அதிலும் விலங்குகளின் குறிப்பாக "பாம்பு, குரங்கு, யானை" வீடியோகளுக்கென தனி மவுசு இருக்கிறது.

காட்டு விலங்குகளின் வீடியோவுக்கு மவுசு
இந்த நிலையில் சுவாரஸ்யமான இணைய உலகமான சமூக ஊடகங்களில் சமீப காலங்களில் காட்டு விலங்குகளின் வீடியோக்கள் பட்டையை கிளப்பி வருகின்றன. சமூக ஊடக உலகில், ஒவ்வொரு நாளும் விலங்குகளின் வெவ்வேறு வீடியோக்கள் பகிரப்படுகின்றன. அதிலும் பாம்பு வீடியோக்கள் அதிகளவு ஷேர் செய்யப்பட்டு வருகின்றது. அந்தவகையில் தற்போது வெளிவந்துள்ள காணொளி முற்றிலும் மாறுபட்டது. மேலும் இந்த சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோ நிச்சயம் உங்களை பூரிக்க வைக்கும் என்றே கூறலாம்.

மேலும் படிக்க | IQ சோதனைக்கு ரெடியா! காட்டில் ஒளிந்துள்ள சிங்கங்களை10 நொடியில் கண்டுபிடிங்க!

புதரில் பிறந்த குழந்தை
உண்மையில் தற்போது வைரலாகி வரும் வீடியோவில் ஒரு அணில் புதர்களுக்கு நடுவே குழந்தைகளைப் பெற்றெடுத்தது. அப்போது அங்கு திடீரென்று ஒரு மஞ்சள் நிற நாகப்பாம்பு வந்தது. அந்த பாம்பு பிறந்த அணிலை வேட்டையாட முயற்சித்தது, ஆனால் தாய் அணில் தன் குட்டியை  பாதுகாக்க முயற்சிக்கிறது.

முன்னோக்கி நிற்கும் அணில்
இப்போது நாகப்பாம்பின் திட்டத்தை அணில் புரிந்து கொண்டது. இதனால் அணில் எங்கும் ஓடாமல், பாம்புடன் சண்டையிட முடிவு செய்தது. அதன் பிறகு அந்த அணில் நாகப்பாம்பின் முன் வந்து நின்றது. மறுபுறம் அந்த நாகப்பாம்பு பலமுறை அந்த தாய் அணிலை தாக்க முயற்சிக்கிறது. இருப்பினும் அந்த அணில் பின்வாங்கவில்லை. இறுதியில் நாகப்பாம்பு பின்வாங்கி அங்கிருந்து சென்று விடுகிறது.

வீடியோவை இங்கே காண்க: 

வைரலாகி வரும் இந்த வீடியோ Latest Sightings என்கிற யூடியூப் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஆயிரக்கணக்கான வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. மேலும் இந்த பார்த்து அதிர்ந்து போன இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள்.

மேலும் படிக்க | பரம எதிரிகளாக இருக்கும் பாம்பும் கீரியும்... காரணம் என்ன தெரியுமா!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News