ஆக்சிஜனுக்கு பதில் செக்ஸ் சலுகை: அனுபவத்தைப் பகிர்ந்த ட்விட்டர் பயனர், ஆன்லைனில் ஆவேசம்

தொற்றுநோயின் விளைவுகளால் பல சிக்கல்களில் மாட்டிக்கொண்டு பல தேவைகளுக்கு இடையில் உழலும் நபர்களிடம் செக்ஸ் சலுகை பெற முயலும் நபர்கள் நம் நாட்டிற்கு அவமானத்தைத் தேடித் தரும் அற்பர்கள் என்றால் அது மிகையாகாது.

Written by - ZEE Bureau | Last Updated : May 13, 2021, 01:00 PM IST
  • தொற்றுநோய் காலத்தில் மனிதனுக்குள்ளிருக்கும் மிருகமும் அவ்வப்போது தலைதூக்குகிறது.
  • ஆக்ஸிஜன் கேட்ட பெண்ணிடம் செக்ஸ் சலுகை கோரியுள்ளார் ஒரு நபர்.
  • இந்த சம்பவம் பற்றிய பதிவால் ஆன்லைனில் பயனர்கள் சீற்றம்.
ஆக்சிஜனுக்கு பதில் செக்ஸ் சலுகை: அனுபவத்தைப் பகிர்ந்த ட்விட்டர் பயனர், ஆன்லைனில் ஆவேசம்

புதுடெல்லி: COVID-19 தொற்றுநோயின் இரண்டாவது அலையின் காரணமாக நாடு பல இன்னல்களை சந்தித்து வருகிறது. பலர் தங்களால் முடிந்ததையும் தாண்டி பல வித உதவிகளை செய்து வருகிறார்கள். எனினும், இந்த இன்னலை பயன்படுத்திக்கொண்டு தங்கள் வக்கிரத்தைக் காட்டும் சில வில்லன்களும் நம்மிடையே நடமாடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். 

இந்த சவால் மிகுந்த சூழல் மனிதர்களுக்குள் இருக்கும் பல நல்ல குணங்களை வெளிக்காட்டிக்கொண்டு இருக்கிறது. அதே நேரம் மனிதனுக்குள்ளிருக்கும் மிருகமும் அவ்வப்போது தலைதூக்கத்தான் செய்கிறது. பலரது தேவையையும், போராட்டத்தையும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு இந்த இக்கட்டான நேரத்திலும் பண்ம ஈட்டுவதிலேயே சிலர் குறியாக உள்ளனர். ஆனால், பணம் ஈட்டுவதையும் தாண்டி சில கொடுமைகளும் நடக்கின்றன என்பது பலருக்குத் தெரிவதில்லை.

சமீபத்தில் வெளிவந்த செய்தி ஒன்றில் மனித மனதின் கொடூரத்தின் அடுத்த நிலை பற்றி தெரிய வந்துள்ளது. நம் நாட்டில் ஆக்ஸிஜன் (Oxygen) நெருக்கடி நீடித்து வருகிறது. பலர் ஆக்ஸிஜனுக்காக பல இடங்களில் அலைந்து திரிகிறார்கள். அப்படி ஒருவரது ஆக்ஸிஜன் தேவையைப் பயன்படுத்திக்கொண்டு அதற்கு பதிலாக ஒருவர் வைத்துள்ள கோரிக்கை அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

தனக்குத் தெரிந்த ஒரு பெண்ணுக்கு நடந்த ஒரு கசப்பான அனுபவத்தைப் பற்றி ஒரு ட்விட்டர் (Twitter) பயனர் கூறியுள்ளார். சமூக வலைத்தளத்தை இதைப் பற்றிய விழ்ப்புணர்வை ஏற்படுத்குவதற்கான தளமாக பயன்படுத்திய அந்த பயனரது பதிவைப் பார்த்து ஆயிரக்கணக்கானோர் ஆடிப்போனார்கள். 

தனக்குத் தெரிந்த, தனது இளைய சகோதரி போன்ற ஒரு பெண்ணுக்கு அவரது தந்தைக்காக ஆக்ஸிஜன் தேவைப்பட்டது என்றும், ஆக்ஸிஜனுக்கு பதிலாக தன்னுடன் உடலுறவு வைத்துக்கொள்லுமாறு அவரிடம் ஒருவர் கேட்டார் என்றும் அந்த பயனர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

அவர் தனது பதிவில், " அவர் எனது தோழியில் சகோதரி, எனக்கு இளைய சகோதரி போன்றவர். ஒரு உயர்தர அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் அவரது தந்தைக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர் தேவைப்பட்டு இருக்கிறது. அவரது அண்டை வீட்டில் வசிப்பவர், அந்த பெண் தன்னுடன் செக்ஸ் வைத்துக்கொண்டால் ஆக்ஸிஜன் சிலிண்டர் தருவதாகக் கூறியுள்ளார். இப்படிப்பட்டவர்களுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுப்பது? அந்த நபரிடம் கேட்டால் அவர் இதை ஒப்புக்கொள்ளப்போவதில்லை" என்று எழுதியுள்ளார். 

ALSO READ: Hilarious! தடுப்பூசி ஃபார்முலா தொடர்பான கெஜ்ரிவாலின் யோசனை இணையத்தில் வைரல்

இந்த பதிவு ஆன்லைனில் (Online) சீற்றத்தைத் தூண்டியது. ஆயிரக்கணக்கானோர் இந்த விவாதத்தில் ஈடுபட்டு அந்த நபரை கடுமையாக சாடினார்கள். அந்த நபரின் பெயரை வெளிப்படுத்தி அவரை அனைவர் முன்னிலையிலும் அவமானப்படுத்த வேண்டும் என சிலர் கூறினர். சிலரோ காவல்துறையிடம் புகார் அளிப்பதுதான் இதற்கான சரியான வழி என்று கூறி வருகிறார்கள். 

"பாவம் அந்தப் பெண்! இதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது. ஏனென்றால் அந்த நபர் இதை எளிதாக மறுத்து விடுவார். சாட்சி கிடையாது. இதுபோல் தினமும் ஆயிரம் சம்பவங்கள் நடக்கின்றன. இந்த பெண் சற்று உயர்வகுப்பை சேர்ந்தவர் என்பதால் இந்த சம்பவம் வெளியே வந்திருக்கிறது" என்று ஒரு பயனர் குறிப்பிட்டுள்ளார். 

தொற்றுநோயின் விளைவுகளால் பல சிக்கல்களில் மாட்டிக்கொண்டு பல தேவைகளுக்கு இடையில் உழலும் நபர்களிடம் செக்ஸ் சலுகை பெற முயலும் நபர்கள் நம் நாட்டிற்கு அவமானத்தைத் தேடித் தரும் அற்பர்கள் என்றால் அது மிகையாகாது.

ALSO READ: Watch Viral Video: நீருக்கடியில் உடற்தகுதி குறித்த விழிப்புணர்வைப் பரப்பும் இளைஞன்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News