தென்னாப்பிரிக்காவின் செலாட்டி கேம் ரிசர்வ் (South Africa's Selati Game Reserve) பகுதியில், சஃபாரி ஜீப்பில் சென்ற பயணிகள் மீது கோபமடைந்த யானை ஒன்று சரமாரியாக தாக்கிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது.
யானை பலம் பொருந்தியவை. அவை அமைதியாக இருந்தாலும், எப்போது தங்கள் சீற்றத்தைக் காட்டும் என்று தெரியாது. கோபம் வந்தால், யானைகள் ஏற்படுத்தும் அச்சமும், அழிவும் நினைத்துக்கூட பார்க்க முடியாதவை... யானையின் ஆக்ரோஷத் தாக்குதல் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது, அதில் கோபமான யானை, சுற்றுலாப் பயணிகளிடம் வந்து அவர்களின் சஃபாரி ஜீப்பை மோதித் தள்ளுவதைப் பார்க்கும்போது திகிலாக இருக்கிறது.
க்ரூகர் தேசிய பூங்காவின் (ruger National Park) எல்லையில் அமைந்துள்ள தென்னாப்பிரிக்காவின் செலாட்டி கேம் ரிசர்வ் பகுதியில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. பயிற்சி வழிகாட்டிகள் குழு ஒன்று காட்டில் சஃபாரி செய்து கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது. ஜீப் குறுகலான பாதையில் சென்று கொண்டிருந்த போது, புதர்களுக்குள் இருந்து காட்டு யானை ஒன்று ஜீப்பின் மீது பாய்ந்தது. அடுத்து என்ன நடந்தது? இதோ வீடியோ...
Too much intrusion will take your life in Wilderness. However, wild animals keeps on forgiving us since long.#responsible_tourism specially wildlife tourism should be educational rather recreational.
हांथी के इतना घुसा नही जाता watch second video too pic.twitter.com/AOKGZ2BAjB— WildLense® Eco Foundation (@WildLense_India) November 30, 2021
இந்த வீடியோவை EcoTraining வழிகாட்டிகள் எடுத்ததாக டெய்லி மெயில் பத்திரிக்கை தெரிவித்துள்ளது. 13 அடி உயரமுள்ள யானை ஜீப்பை எப்படி கவிழ்த்தது என்பதை இந்த வீடியோ (VIRAL VIDEO) காட்டுகிறது. ஜீப்பின் பின்னால் ஒரு சஃபாரி வாகனம் இருந்தது, பீதியடைந்த காவலர் "வெளியே போ, வெளியேறு, வெளியேறு" என்று கத்துவது கேட்டது.
பயிற்சி வழிகாட்டிகள் ஆக்ரோஷமான யானையிடம் இருந்து தப்பி ஓடிவிட்டனர், மேலும் அவர்கள் அதிர்ச்சியடைந்திருக்க வேண்டும், அதிர்ஷ்டவசமாக, யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
EcoTraining சமூக ஊடகங்களில் அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பையும் வெளியிட்டது. அதில், "வழக்கமான நடவடிக்கையின் போது, EcoTraining பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் இனப்பெருக்கம் செய்யும் யானை மந்தையை பார்த்தார்கள். வாகனம் அங்கே நிற்பதைப் பார்த்த ஒரு முரட்டு யானை, வாகனத்தை தாக்கியது. உடனே அந்த வாகனத்தில் இருந்த பயிற்சியாளர்கள் இரண்டாவது வாகனத்திற்கு மாற்றப்பட்டனர். பயிற்சியாளர்களுடன் வந்த EcoTraining பயிற்றுனர்கள் இருவரும் இந்த துறையில் 25 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்தில் இருந்தவர்களுக்கு பின்னர் தொழில்முறை ஆலோசனையும் வழங்கப்பட்டது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் விவாதத்தை உருவாக்கியது, விலங்குகளின் எல்லைக்குள் மனிதர்கள் அத்துமீறி நுழைவதால் ஏற்படும் ஆபத்துகளை பல விலங்கு ஆர்வலர்கள் சுட்டிக்காட்டினர். இருப்பினும் பயிற்சி வழிகாட்டிகளுக்கு ஆதரவாகவும் பலர் பதிவிட்டுள்ளனர். எது எப்படியிருந்தாலும் சரி, யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதுதான் ஆறுதலான செய்தி...
ALSO READ | டயர் பஞ்சராகி நின்ற விமானம்: கைகளால் தள்ளும் பயணிகள்: வைரலாகும் Video
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR