உலகத்தில் உள்ள உயிரினங்களில் பல ஆச்சரியத்தை கொடுத்தாலும் பறவைகள் எப்போதும் பரவசத்தைக் கொடுக்கக்கூடியவை. இதனால் பறவைகளை பார்த்தாலே மனிதர்கள் தங்களை மறந்து ரசிப்பது உண்டு.
தன்னால் பறக்க முடியாதபோது பறவை பறப்பதை வியப்போடு பார்த்துக்கொண்டிருப்பார்கள். ஆனால் தங்களால் பறக்க முடியவில்லையே என மனிதர்கள் எப்போதும் ஒரு ஏக்கத்தை சுமப்பது உண்டு.
மேலும் படிக்க | 30 நொடிகளில் 3 ஆந்தைகளை கண்டறிய வேண்டும்; சாவலை ஏற்க தயாரா...
மனிதர்களின் பார்வையைவிட பறவை பார்வைக்கு எப்போதும் மதிப்பு அதிகம் உண்டு. அதுமட்டுமின்றி வானத்தில் பறவை எவ்வளவு வேகத்தில் பறக்கும், அதன் சிறகுகள் எவ்வளவு வேகமாக சிறகடிக்கின்றன என தெரிந்துகொள்வதில் பலருக்கு ஆர்வம் உண்டு.
அதேபோல், வானத்திலிருந்து பூமியை நோக்கும் பறவை பார்வையில் எவையெல்லாம் தெரியும் என்ற எதிர்பார்ப்பும், கேள்விகளும் மனிதர்களுக்கு எழுவது உண்டு.
மேலும் படிக்க | கோபத்தில் குஸ்தி போடும் சிங்கங்கள்: இவ்வளவு சீற்றம் உடம்புக்கு நல்லதில்ல காட்டு ராஜா
அதனை போக்கும் வகையில் ஸ்கை ட்ரைவ் என்ற முறை தற்போது அதிகரித்துள்ளது. பறவை போலவே வானத்தில் பறந்து அதனை அனுபவிப்பதும், அங்கிருந்து பூமியை பார்ப்பதும் அலாதியான ஒன்று என ஸ்கை ட்ரைவர்கள் கூறுவதுண்டு.
அவர்கள் பறக்கும்போது அவ்வப்போது பறவைகளும் அவர்களுடன் இணைந்துகொள்ளும். அப்படி ஒரு வீடியோ ஒன்று தற்போது வைரலாகியுள்ளது.
Paragliding with a vulture..pic.twitter.com/Bwyle7ktOq
— o̴g̴ (@Yoda4ever) June 5, 2022
அந்த வீடியோவில் ஒரு நபர் ஸ்கை ட்ரைவ் செய்துகொண்டிருக்கிறார். அந்த சமயத்தில் கழுகு ஒன்றும் பறந்துகொண்டிருக்கிறது. அந்தக் கழுகை இவரும் ஃபாலோ செய்து போகிறார்.
ஒரு கட்டத்தில் கழுகு அந்த ஸ்கை ட்ரைவ் இயந்திரத்தின் மேல் அமர்ந்து ஒய்யாரமாக மிதந்து வருகிறது. இந்த வீடியோவை பார்த்த பலரும், பறவை பார்க்க வேண்டுமென்றால் இந்த வீடியோவை பார்த்துக்கொள்ளலாம் போல என கூறி அதிகம் பகிர்ந்துவருகின்றனர்.
மேலும் படிக்க | பூனைகளின் சண்டையை தடுத்து நிறுத்திய நாய்...வைரல் வீடியோ!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR