தண்ணீரில் குதியாட்டம் போடும் யானைகள்! டாப்ஸ்லிப் வீடியோ வைரல்

Topslip Elephants video viral: ஆனைமலை புலிகள் காப்பகம் டாப்சிலிப்பில் குட்டிகளுடன் விளையாடிய காட்டுயானை கூட்டம்,சமூக வலைதளங்களில் வீடியோ வைரல் ஆகிறது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Mar 27, 2023, 09:14 PM IST
  • டாப்ஸ்லிப்பில் டாப்லெஸாக குளிக்கும் யானைகள்
  • யானைகளின் குளியல் வீடியோ வைரல்
  • கும்மாளம் போடும் யானைகள்
தண்ணீரில் குதியாட்டம் போடும் யானைகள்! டாப்ஸ்லிப் வீடியோ வைரல் title=

பொள்ளாச்சி: ஆனைமலை புலிகள் காப்பகம் டாப்சிலிப்பில் குட்டிகளுடன் விளையாடிய காட்டுயானை கூட்டம்,சமூக வலைதளங்களில் வீடியோ வைரல் ஆகிறது. ஆனைமலை புலிகள் காப்பகம் வால்பாறை, உலாந்தி வனச்சரகம் டாப்சிலிப் பகுதிகளில் யானை, சிறுத்தை, புலி, கரடி, புள்ளி மான், காட்டுமாடு, கரு சிறுத்தை என இருவாச்சி மற்றும் பல விதமான பறவைகள் உள்ளன, தற்போது கோடை வெயில் அதிகமாக உள்ளதால் வறட்சி ஏற்பட்டு உள்ளது,

வனத்துறையினர்  வனவிலங்குகளுக்கு நீர் தொட்டிகளில் டிராக்டர் மூலம் தண்ணீர் நிரப்பி வருகின்றனர்,மேலும் வனப்பகுதிகளில் தீ தடுப்புக்கோடு அமைத்து காட்டுத்தீ பரவாமல் இருக்க வனத்துறையினர் பல்வேறு கட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதையடுத்து வனப்பகுதிகளில் உள்ள நீர்த்தேக்கங்களில் காட்டு யானை கூட்டங்கள் உடல் சூட்டை தணிக்க குளித்து விளையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இணைய உலகம் தனி உலகம் என்பதும், நமக்கு தேவையான தகவல்களுக்கு பஞ்சமில்லை என்பதும் தான் நமக்கு அதன் மீதான ஈர்ப்பைக் கூட்டுகிறது. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு தளமாகவும் உள்ளது என்றால் மிகையில்லை.

மேலும் படிக்க | Viral Video: சிங்கங்களிடம் சிக்கி தவித்த முதலை! வனத்தில் ஒரு உயிர் போராட்டம்!

நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களையும், மன அழுத்தங்களையும் சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு வரப்பிரசாதமாக இருக்கின்றன. 

யானைகள் என்றாலே சுவாரசியம் தான். அதனால் தான் யானையின் வீடியோ வைரலாகிறது. உலகில் நிலத்தில் வசிக்கும் மிகப்பெரிய விலங்குகளில் யானை முக்கியமாந்து. ஒரு யானை 20 ஆண்டுகள் வரை தொடர்ந்து வளரும் என்பது கூடுதல் தகவல்.

யானைப் பசிக்கு சோளப்பொறி என்ற பழமொழியை கேட்டிருக்கலாம். அதற்கு காரணம், முழுமையாக வளர்ந்த ஒரு யானை, நாளொன்றுக்கு 400 கிலோ வரையில் உணவை உண்ணுமாம். அதேபோல, யானையின் தாகத்தை அடக்குக்வதும் சாதாரணமான விஷயம் இல்லை. 

ஒரு யானை, சராசரியாக 150 லிட்டர் தண்ணீர் குடிக்கும், இது ஒரு நாளைக்கான குடிநீர் மட்டுமே. இப்படி பல சிறப்புகளைக் கொண்ட யானை, பிறப்பதே ஒரு அதிசயம் தான். ஏனென்றால், யானைகளின் கர்ப்ப காலம் 630 நாட்கள் சுமார் 21 மாதங்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? 

மேலும் படிக்க | Viral Video: மயக்கும் நடனத்தால் காதலிக்கு தூது விடும் காட்டுக் கோழி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News