Viral News: என்னது போட்டோகிராபர் இல்லையா... திருமணத்தை நிறுத்திய மணப்பெண்

கடந்த சில வாரங்களாக, மணப்பெண்கள் பல்வேறு காரணங்களுக்கான திருமணத்தை நிறுத்தியுள்ள செய்திகளை பார்த்திருப்போம். அவை பெரும்பாலும் மாப்பிள்ளையின் தவறான நடவடிக்கை அல்லது, திருமணத்தில் கூறப்பட்ட பொய் ஆகியவை காரணமாக இருந்தது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 30, 2022, 12:04 PM IST
Viral News: என்னது போட்டோகிராபர் இல்லையா... திருமணத்தை நிறுத்திய மணப்பெண் title=

கடந்த சில வாரங்களாக, மணப்பெண்கள் பல்வேறு காரணங்களுக்கான திருமணத்தை நிறுத்தியுள்ள செய்திகளை பார்த்திருப்போம். அவை பெரும்பாலும் மாப்பிள்ளையின் தவறான நடவடிக்கை அல்லது, திருமணத்தில் கூறப்பட்ட பொய் ஆகியவை காரணமாக இருந்தது. 

இந்நிலையில், தற்போது வித்தியாசமான காரணத்தினால் மணமகள் திருமணத்தை நிறுத்தி விட்டார்.  இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை  உத்திர பிரதேசத்தின் கான்பூரில் உள்ள டெஹாட் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இருந்து பதிவாகியுள்ளது.

கான்பூர் தேஹாட்டில் உள்ள மங்கல்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமத்தில் வசிக்கும் விவசாயி ஒருவரின் மகளுக்கு போக்னிபூரில் வசிக்கும் ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

மேலும் படிக்க |  கொஞ்சிக் கொஞ்சி பேசி மதிமயக்கும் கிளி; வியப்பில் ஆழ்ந்த நெட்டிசன்கள்

மாப்பிளை அழைப்பு வந்ததும், 'ஜெய்மாலா' என்னும் மாலை மாற்றிக் கொள்ளும் விழாவுக்காக மேடை அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. மணமகளின் குடும்பத்தினர் மாப்பிள்ளை உறவினர்கள் அனைவரையும் வரவேற்றனர். மணமகள் இருவரும் 'ஜெய்மாலா' நிகழ்விற்காக திருமண மேடையை அடைந்தனர்.

இருப்பினும், இந்த மறக்க முடியாத தருணங்களை படம்பிடிக்க புகைப்படக்காரர் இல்லை என்பதை மணமகள் அறிந்து கொண்டார். இதனால் அவருக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. உடனேயே திருமண மேடையை விட்டு கீழே இறங்கி விட்டார். திருமணத்தையும் நிறுத்தி விட்டார்

எல்லாரும் மணப்பெண்ணை சமாதானப்படுத்த எவ்வளவோ முயற்சி பண்ணினர். ஆனால், “இன்னைக்கு இந்த முக்கியமான தருணத்தை படம் பிடிக்க ஒரு போட்டோகிராபரை கூட கூட்டி வர முடியாதவர், வருங்காலத்தில் என்னை எப்படி கவனித்துக் கொள்வார்” என வாதிட்டுள்ளார்.

குடும்பத்தில் உள்ள பெரியவர்களும் அவளை சமாதானப்படுத்த முயன்றனர், ஆனால் பலனில்லை. அதன்பிறகு, இந்த விவகாரம் காவல்நிலையத்திற்கு சென்றது. அங்கு பரஸ்பர ஒப்புதலுடன் திருமணத்திற்கான கொடுக்கப்பட்ட பணம் மற்றும் மதிப்புமிக்க பொருட்களைத் திருப்பித் தர இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.

மேலும் படிக்க | Viral News: 11 லட்சம் ரூபாய் செலவழித்து நாயாக மாறிய நபர்

மங்கல்பூர் காவல் நிலையத்தின் சப்-இன்ஸ்பெக்டர், டோரி லால், இந்த விவகாரம் பரஸ்பரம்  தீர்க்கப்பட்டது என்றார்.

"இருதரப்பினரும் பரஸ்பரம் திருமணத்திற்காக கொடுத்த பொருட்களையும் பணத்தையும் திருப்பிக் கொடுத்தனர். இதைத் தொடர்ந்து, மணமகன், மணமகள் இல்லாமல் தனியாக சொந்த ஊருக்கு திரும்ப சென்றுவிட்டார்," என்று அவர் மேலும் கூறினார், மேலும் "புகைப்படக்காரர் மற்றும் வீடியோகிராஃபர் ஏற்பாடு தொடர்பாக தகராறு ஏற்பட்டது. மணமகன் தரப்பு  ஏற்பாடு செய்யாததால், கோபமடைந்த அந்த பெண் திருமணம் செய்ய மறுத்துவிட்டார்.

மேலும் படிக்க | Rare Penis Plant: ஆண்குறி பூக்களைப் பறிக்காதீர்கள்: கம்போடிய அரசின் எச்சரிக்கை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News