பள்ளி நாட்களில் குழந்தைகளின் பெரும் தலைவலி எதுவென்று கேட்டால்... வீட்டு பாடங்கள் தான்!
பள்ளியில் கொடுக்கும் வீட்டு பாடங்களை செய்து முடித்து செல்வதற்குள், தங்களது பெற்றோர்களை படாதபாடு படுத்திவிடுவார். தனது வீட்டு பாடத்தை செய்து தரும்படி பெற்றோரை வேண்டும் குழந்தைகளும் இப்பட்டியலில் அடங்குவர்.
ஆனால் தற்போதும் இந்த வழக்கங்கள் தொடர்கிறதா?... என்ற கேள்விக்கு பதிலும் கேள்விகுறிதான்!
காரணம் இக்கால குழந்தகைள் பெற்றோர்களை விடவும் அதிகம் சிந்திக்கின்றனர். அதற்கு வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களும் ஒரு முக்கிய காரணம் ஆகும். ஆனால் இதே தொழில்நுட்பங்கள் அவர்களை சிந்திக்கவிடாமல் செய்துவிட்டால?...
அப்படி தான் ஒரு நிகழ்வு நடைப்பெற்றுள்ளது அமெரிக்காவின் அலாஸ்காவில்.
3-ஆம் வகுப்பு பயிலும் மாணவன் ஒருவன் Amazon நிறுவனத்தின் Alexa இயந்திரத்தின் உதவி கொண்டு தனது வீட்டுப்பாடத்தினை முடிக்கின்றான். இந்த வீடியோ-வினை அவனது தாயாரா இணையத்தில் வெளியிடுகின்றார். இணையத்தில் பார்த்து வரும் நெட்டீசன்கள் இந்த வீடியோ காட்சிகள் மீது கடுமையான விமர்சனங்களை வைக்கின்றனர். காரணம் காட்சிப்படுத்தப்பட்டுள்ள நிகழ்வுகள் குழந்தைகளின் சிந்திக்கும் திறனை சிதைக்கும் நிகழ்வாகவும், அவர்களை சோம்பேறிகளா மாற்றும் நிகழ்வாகவும் அமைந்துள்ளதால்...
அப்படி என்ன நடக்கிறது இந்த வீடியோவில்...
வீட்டுப்பாடம் செய்யும் இந்த மாணவன், அலெக்சாவிடம் ‘5-லிருந்து 3-ஐ கழித்தால் என்ன வரும்? என கேட்கிறான். அதற்கு அந்த இயந்திரமும் நொடியில் சரியான பதில் அளிக்கிறது’. வீட்டில் உதவும் அலெக்சா, மாணவனின் வகுப்பு அறையில் உதவுமா?