Sentiment Video: நாயை காப்பாற்றும் நாயகன் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்

நாயை காப்பாற்ற உறைபனியில் ஆற்றில் மூழ்கும் மனிதாபிமான இளைஞரின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 5, 2022, 10:06 AM IST
  • நாயை காப்பாற்ற உறைபனியில் ஆற்றில் இறங்கும் இளைஞர்
  • உறைபனியிலும் மனிதாபிமானம் உறையவில்லை
  • சமூக ஊடகங்களில் வைரலாகும் மனிதாபிமான வீடியோ
Sentiment Video: நாயை காப்பாற்றும் நாயகன் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் title=

புதுடெல்லி: நாயைக் காப்பாற்ற, அந்த நபர் பனியாற்றில் குதித்து, உறைபனியில் தனது ஆடைகளை கழற்றினார்!  இந்த உணர்ச்சிகரமான வீடியோ, சமூக ஊடகங்களில் வைரலாகிறது.

ஒரு நபர் தனது ஆடைகளை கழற்றிவிட்டு பனியால் உறைந்த ஆற்றில் குதித்ததை ​​சிலர் பார்த்துக் கொண்டிருந்தனர். நாயை காப்பாற்றும் நாயகன் வீடியோ: சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

இந்த வீடியோ உங்கள் இதயத்தை தொடும். அந்த வீடியோவில், ஒரு நாயை காப்பாற்றுவதற்காக ஒரு நபர் பனிக்கட்டி நதியில் குதித்துள்ளார்.

அப்போது, அந்த நபர் தனது உயிரைக் கூட பொருட்படுத்தாமல், கடும் குளிரில், ஆடைகளை கழற்றி, பனிக்கட்டி நீரில் குதித்துள்ளார். நாயின் உயிரைக் காப்பாற்றிய பின்னரே அவர் திரும்புகிறார்.

ALSO READ | CIA எய்ட்ஸ் நோயை பரப்பியதா?

தண்ணீரில் மூழ்கும் நாய்
வைரல் ஹாக் என்ற கணக்கில் இருந்து இன்ஸ்டாகிராமில் வீடியோ பகிரப்பட்டுள்ளது. வீடியோ மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. முதலில், வீடியோவில் ஒரு பனி சூழ்ந்த பகுதி தெரியும். அங்கே சிலர் பனிக்கட்டி நதியை பார்க்கிறார்கள்.

அப்போது ஒரு மனிதன் தன் ஆடைகளை எல்லாம் கழற்றி விட்டு பனியில் உறைந்த நதியில் குதிக்கிறான். நடுங்கும் குளிரில் அந்த நபர் ஏன் இப்படி செய்தார் என்பது வீடியோவில் நீண்ட நேரம் ஆகியும் தெரியவில்லை.

ஒருவர் தண்ணீரில் குதிக்கும் போது, ​​மேற்பரப்பில் உள்ள பனிக்கட்டி உடைந்து போவதை வீடியோவில் காணலாம். இதற்குப் பிறகு, தண்ணீரில் மேலும் அவர் நகர முயற்சிக்கும்போது, பனி உடைகிறது. 
பார்க்குவே சிலிர்க்க வைக்கும் குளிரில், அந்த இளைஞர் துணிச்சலாக குதித்தது மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. அந்த நபர் கஷ்டப்பட்டு நகர்ந்து செல்வதை காணலாம். 

தண்ணீரில் மூழ்கிக் கொண்டிருந்த  ஒரு நாய் இப்போது தெரிகிறது. உறைபனியில் நாயைக் காப்பாற்றும் மனிதனின் மனிதாபிமானம் அனைவரையும் சிலிர்க்க வைக்கிறது.

ALSO READ | சிறுமியின் புஷ்பா ஹூக் ஸ்டெப்! வைரலாகும் வீடியோ!

நாய் பனி நீரில் இருந்து வெளியேற முடியாது. உதவி கிடைக்குமா என அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தது. வீடியோவில் நாயின் நிலையைப் பார்த்தால் பரிதாபம் ஏற்படுகிறது. 

நாயைக் காப்பாற்ற தண்ணீரில் குதித்த  நபர், நாயை தனது கைகளால் தூக்கிக் கொண்டு மீண்டு வருகிறார். அந்த வீடியோவை பார்த்த சமூக வலைதளவாசிகள் அந்த நபரை பாராட்டுட் மழையில் நனைவிக்கின்றனர்.

இந்த வீடியோவை இதுவரை 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். மனிதாபிமானம் கொண்ட அந்த நபரை ஹீரோ என்று பாராட்டாதவர்களே கிடையாது. இது மனிதாபிமானத்தைக் காட்டும் உணர்ச்சிகரமான அன்பு வீடியோ...

ALSO READ | ’இது எங்க ஏரியா..!’ சிங்கத்தின் ஒற்றை பார்வையில் ஓடிய ஓநாய்கள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News