நாய்க்கு நக்கல பாத்தீங்களா? சாஸ் இல்லாம பிரஞ்சு ஃப்ரைஸ் சாப்பிடாதாம்: கியூட் வைரல் வீடியோ

Funny Dog Video: நாய் பிரஞ்ச் ஃப்ரைஸ் சாப்பிடும் ஒரு வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. இது மிக க்யூட்டாக உள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 9, 2023, 06:01 PM IST
  • நாய் மிகவும் நன்றியுள்ள விலங்கு.
  • அதுமட்டுமல்ல, அது மிகவும் புத்திசாலியான விலங்காகவும் உள்ளது.
  • நாயின் பல வீடியோக்கள் அவ்வப்போது சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன.
நாய்க்கு நக்கல பாத்தீங்களா? சாஸ் இல்லாம பிரஞ்சு ஃப்ரைஸ் சாப்பிடாதாம்: கியூட் வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.

நாய் மிகவும் நன்றியுள்ள விலங்கு. அதுமட்டுமல்ல, அது மிகவும் புத்திசாலியான விலங்காகவும் உள்ளது. நாயின் பல வீடியோக்கள் அவ்வப்போது சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன. நாம் ஆச்சரியப்படும் பல விஷயங்களை செய்து நாய்கள் நம்மை அசத்துவது உண்டு. தற்போது மிக வித்தியாசமான ஒரு வீடியோ இணையத்தில் பகிரப்பட்டுள்ளது. நாய்கள் மற்றும் பூனைகளின் வீடியோக்கள் பெரும்பாலும் சமூக ஊடகங்களில் ஆதிக்கம் செலுத்துகின்றன.

பொதுவாக நாய்கள் இருக்கும் வீடுகளில் அவை குடும்பத்தின் ஒரு அங்கமாகவே பார்க்கப்படுகின்றன. நாய்களும் தங்கள் முதலாளிகள் மற்றும் அவை வளர்க்கப்படும் வீட்டு உறுப்பினர்கள் மீது அதிகப்படியான பாசத்தை பொழிகின்றன. ஆகையால், அவற்றின் எதிர்பார்ப்புகளும் வீட்டு உறுப்பினர் போலவே இருக்கின்றன.

சமீபத்தில் நாயின் ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இது பார்ப்பதற்கு மிக வேடிக்கையாக உள்ளது. இதில் நாயின் கோவத்தையும் பரிதாப நிலையையும் பார்க்க  முடிகின்றது. இதில் நாயை பார்க்க பாவமாக இருந்தாலும், இந்த வீடியோ பார்க்க வேடிக்கையாகவும் உள்ளது. இதை பார்த்தால் நமக்கு சிரிப்பும் வருகிறது. 

வைரல் ஆகி வரும் இந்த வீடியோவில், நாயின் உரிமையாளர் தனியாக அமர்ந்து பிரஞ்சு ஃப்ரைஸ் சாப்பிடுக்கொண்டிருப்பதை காண முடிகின்றது. அருகில் அவருடைய வளர்ப்பு நாய் இருப்பதையும் வீடியோவில் காண முடிகின்றது. 

நாய்க்கு பிரஞ்சு ஃப்ரைஸ்

ஒரு நபர் நிம்மதியாக ஒரு நாற்காலியில் அமர்ந்து பிரஞ்சு ஃப்ரைஸ் சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறார். அவர் அருகில் நாய் ஒன்று தரையில் அமர்ந்துள்ளது. அவர் பிரஞ்சு ஃப்ரைஸ் சாப்பிடுவதை பார்த்த நாய்க்கும் அதை சாப்பிட ஆசை பிறக்கிறது. தனக்கும் பிரஞ்சு ஃப்ரைஸ் அளிக்குமாறு நாய் அந்த நபரிடம் செய்கை செய்கிறது. ஆனால் அந்த நபர் அதை கண்டுகொள்ளாமல் நாயை பார்க்க வைத்து பிரஞ்சு ஃப்ரைசை ரசித்து ருசித்து சாப்பிடுகிறார். 

மேலும் படிக்க | இளைஞனை சின்னபின்னமாக்கிய சுறா.. மனம் பதற வைக்கும் வீடியோ!

பின்னர் தனது செல்ல நாய்க்கு அவர் சாஸ் இல்லாமல் பிரஞ்சு ஃப்ரைஸ் ஊட்டுகிறார். ஆனால், நாய் அதை உண்ண மறுக்கிறது. பின் அவர் சாஸுடன் பிரஞ்சு ஃப்ரைஸ் ஊட்டுகிறார். இப்போது நாய் அதை சாப்பிடுகிறது. இந்த அழகான கியூட் வீடியோ சமூக ஊடகங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. மேலும் இது குறித்து மக்களும் தங்கள் மாறுபட்ட கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

நாயின் அந்த கியூட்டான வைரல் வீடியோவை இங்கே காணலாம்: 

இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் உள்ள Goldensfriend என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோவுக்கு இதுவரை 24 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வியூஸ்களும் ஏகப்பட்ட லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். ‘இது மிகவும் புத்திசாலியான நாய்’ என ஒரு பயனர் கமெண்ட் செய்துள்ளார். ‘ நாயின் டேஸ்டை பாருங்கள்’ என மற்றொரு பயனர் கூறியுள்ளார். 

மேலும் படிக்க | துடைப்பம், வாளி, ப்ரெஷ், ‘அது’....: கல்யாண கிஃப்ட் அலப்பறைகள், வேற லெவல் வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News