Viral Video: அவரு தோளுல தொங்குறது துண்டு இல்ல, மலைப்பாம்பு: மலைக்க வைக்கும் வீடியோ

ஆச்சரியப்பட வைக்கும் பல வீடியோக்களை நாம் இணையத்தில் தினமும் பார்க்கிறோம். சில நேரங்களில் நம்ப முடியாத பல வீடியோக்களையும் காண்கிறோம்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 6, 2021, 06:49 PM IST
Viral Video: அவரு தோளுல தொங்குறது துண்டு இல்ல, மலைப்பாம்பு: மலைக்க வைக்கும் வீடியோ title=

Viral Video: இணையத்தில் நாம் எதிர்பாராத பல விஷயங்கள் இந்நாட்களில் காணக்கிடைக்கின்றன. ஆச்சரியப்பட வைக்கும் பல வீடியோக்களை நாம் இங்கே தினமும் பார்க்கிறோம். சில நேரங்களில் நம்ப முடியாத பல வீடியோக்களையும் காண்கிறோம்.

இப்போது, அப்படிப்பட்ட ஒரு வீடியோ, சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோவில் ஒரு ராட்சத மலைப்பாம்பையும் (Python) ஒரு நபரையும் காண முடிகிறது. பார்த்தால் உடல் நடுக்கம் கொள்ளும் சில விஷயங்கள் இந்த வீடியோவில் நடக்கின்றன. வைரலான இந்த வீடியோவை பல்வேறு தளங்களில் லட்சக்கணக்கானோர் பார்த்துள்ளனர், ஆயிரக்கணக்கானோர் லைக் செய்துள்ளனர்.

ALSO READ: பகீர் சம்பவம்! கழிப்பறைக்கு சென்ற நபரின் அந்தரங்க பகுதியை கடித்த பாம்பு..!!

சில நொடிகள் உள்ள இந்த வீடியோவில் (Video), ஒரு நபர் தனது தோள்களில் 15 அடி நீளமுள்ள மலைப்பாம்பை சுமந்து செல்வதைக் காண முடிகின்றது. ராட்சத மலைப்பாம்பை சுமந்து கொண்டு திறந்த வெளியில் நடந்து செல்லும் அந்த நபரின் முகத்தில் அச்சம் என்ற உணர்வு பெயரளவிலும் இல்லை என்பது ஆச்சரியத்தை அளிக்கின்றது.

இதில் வினோதமான விஷயம் என்னவென்றால், அந்த நபர் பாம்பை தனது தோளில் வைத்துக்கொண்டு மிகவும் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் காணப்படுகிறார். அவர் முகத்தில் எந்த வித அச்சத்தையோ, பதட்டத்தையோ காண முடியவில்லை.

50 கிலோவுக்கு மேல் எடையுள்ள அந்த மலைப்பாம்பும் அந்த நபருக்கு எந்த வித பிரச்சனையையும் அளிக்கவில்லை என்பதையும் வீடியோவில் காண முடிகின்றது. அந்த மலைப்பாம்பு அவரது கட்டளைப்படி தோள்களில் இருந்து இறங்கி தரையில் ஊர்ந்து செல்லத் தொடங்குவதையும் பார்க்க முடிகிறது. இதையெல்லாம் வீடியோவில் பார்ப்பது மிகவும் அதிர்ச்சியாக உள்ளது.

இந்த அதிர்ச்சியூட்டும் வீடியோவை இங்கே காணலாம்:

சமீபத்தில், சமூக வலைதளங்களில் மலைப்பாம்பு தொடர்பான மற்றொரு வீடியோவும் வைரலானது (Viral Video).  அந்த வீடியோவில், ஒரு நபர் ஏறக்குறைய இருபது அடி நீளமுள்ள மலைப்பாம்பை தோளில் சுமந்து கொண்டு படிக்கட்டுகளில் ஏற முயல்கிறார்.

வைரலாகும் இந்த இரண்டு வீடியோக்களும் Instagram இல் royal_pythons பக்கத்தில் பகிரப்பட்டுள்ளன. இந்த வீடியோக்களுக்கு நெட்டிசன்கள் ஆர்வத்துடன் லைக்குகளையும் கமெண்டுகளையும் அள்ளி வீசி வருகின்றனர். இவை எப்போது எங்கு படமாக்கப்பட்டன என்பது பற்றி தெரியவில்லை.

ALSO READ: Viral Video: திருமண மேடையில் 'Out of Control' ஆன மணமகன், மேடையிலேயே செய்த காரியம்!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News