Viral video : காரில் கரடி, கரடியை கண்டு கதறிய பெண்!!

வேடிக்கையா விவகாரமா என கூற முடியாத வீடியோ ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகின்றது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 18, 2021, 12:21 AM IST
  • காரை திறக்க சென்றால் காரில் கரடி அமர்ந்திருக்கிறது.
  • கதவை சாத்த முயன்று தோற்றார் பெண்.
  • பின்னர் கதறிக்கொண்டே ஓட்டம் பிடித்தார்.
Viral video : காரில் கரடி, கரடியை கண்டு கதறிய பெண்!! title=

மனித வாழ்க்கை வேடிக்கையானது. நாம் எதிர்பார்க்கும் பல விஷயங்கள் நம்மை விட்டு விலகிக்கொண்டே போக, நாம் எதிர்பாராத தருணத்தில், எதிர்பாராத பலவற்றை நாம் சந்திக்க நேரிடுகிறது.

இப்படி எதிர்பாராமல் நாம் சந்திக்கும் பல விஷயங்களில் சில வேடிக்கையாக முடிகின்றன, சில விவகாரமாய் முடிகின்றன.

வேடிக்கையா விவகாரமா என கூற முடியாத வீடியோ ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகின்றது. ஒரு கரடி (Bear) மற்றும் ஒரு பெண்ணின் வைரல் வீடியோதான் (Viral Video) அது.

இந்த வீடியோவில், ஒரு வீடு  / காட்டேஜ் முன் நின்று கொண்டிருக்கும் ஒரு காரை நோக்கி ஒரு கரடி வருகிறது. காரின் கதவைத் திறந்து அந்த கரடி கார் உள்ளே செல்கிறது.

ALSO READ: Viral Video: முழு மானை விழுங்கும் மலைப்பாம்பு நெஞ்சைப் பதபதைக்கும் வீடியோ

இது பற்றி அறியாத அந்த காரின் சொந்தகார பெண்மணி, வீடு / காட்டேஜிலிருந்து பழங்க்களின் பை ஒன்றை எடுத்துக்கொண்டு அந்த காருக்கு வருகிறார். கார் கதவை திறக்கும் அவர் உள்ளே கரடி இருப்பதைக் கண்டு அலறி அடித்துக்கொண்டு ஓட்டம் பிடிக்கிறார்.

இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், அந்த பெண்ணை பார்த்த கரடியும் ஓட்டம் பிடித்தது. அந்த பெண் அலற தொடங்கியவுடன் அக்கரடியும் பதறி ஓடியது. பெண் மீண்டும் அந்த வீட்டுக்குள்ளேயே ஓடிய நிலையில், கரடி சிறிது தூரம் ஓடி, பின்னர் நிற்கிறது.

இந்த வீடியோவை பார்த்த அனைவரும் இதை சமூக ஊடகங்களில் (Social Media) வெகுவாக பகிர்ந்து வருகின்றனர். 

ALSO READ: Viral Video: நடுங்க வைக்கும் வீடியோ; இதயம் பலவீனமானவர்கள் பார்க்காதீர்கள்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News